அயர்லாந்து - ஜிம்பாப்வே அணிகளுக்கு இடையேயான 3ஆவது டி20 போட்டி நேற்று நடைபெற்றது. இப்போட்டியில் டாஸ் வென்ற ஜிம்பாப்வே அணி முதலில் பந்துவீச தீர்மானித்தத்.
அதன்படி களமிறங்கிய அயர்லாந்து அணி பால் ஸ்டிர்லிங்கில் அபாரா சதத்தால், 20 ஓவர்கள் முடிவில் 2 விக்கெட் இழப்பிற்கு 178 ரன்களைச் சேர்த்தது. இதில் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த பால் ஸ்டிர்லிங் 115 ரன்களைச் சேர்த்தார்.
இதையடுத்து இலக்கை துரத்திய ஜிம்பாப்வே அணி தொடக்கம் முதலே விக்கெட்டுகளை இழந்து தடுமாறியாது. இருப்பினும் கேப்டன் கிரேக் எர்வின் அணியை மீட்டெடுக்கும் பொறுப்பில் இறங்கினார்.
ஆனால் அவரும் 33 ரன்களில் ஆட்டமிழக்க பின்னர் வந்த வீரர்களும் அடுத்தடுத்து நடையைக் கட்டினர். இதனால் 18.2 ஓவர்களிலேயே ஜிம்பாப்வே அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 138 ரன்களை மட்டுமே எடுத்தது.
இதன் மூலம் அயர்லாந்து அணி 40 ரன்கள் வித்தியாசத்தில் ஜிம்பாப்வே அணியை வீழ்த்தி, 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் 2-1 என்ற கணக்கில் முன்னிலைப் பெற்றுள்ளது. இப்போட்டியில் சதமடித்த பால் ஸ்டிர்லிங் ஆட்டநாயகனாகத் தேர்வு செய்யப்பட்டார்.