ஐபிஎல் 2023: பஞ்சாப் கிங்ஸ் vs கொல்கத்தா நைட் ரைடர்ஸ் - போட்டி முன்னோட்டம் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்!

Updated: Fri, Mar 31 2023 23:10 IST
Image Source: Google

ஐபிஎல் 16ஆவது சீசன் கோலாகலமாக தொடங்கியுள்ளது. இதில் நாளை சனிக்கிழமை என்பதால் 2 போட்டிகள் நடக்கின்றன. அதன்படி பிற்பகல் 3.30 மணிக்கு மொஹாலியில் நடக்கும் போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோதுகின்றன. 

போட்டி தகவல்கள்

  • மோதும் அணிகள் - பஞ்சாப் கிங்ஸ் vs கொல்கத்தா நைட் ரைடர்ஸ்
  • இடம் - பிந்தரா மைதானம், மொஹாலி
  • நேரம் - பிற்பகல் 3.30 மணி

போட்டி முன்னோட்டம்

கடந்தாண்டு ஐபிஎல் தொடரில் மயங்க் அகர்வால் தலைமையில் களமிறங்கிய பஞ்சாப் கிங்ஸ் அணி பெரிதளவில் சோபிக்காமல் புள்ளிப்பட்டியளில் 6ஆம் இடத்தை மட்டுமே பிடித்தது. இதன்விளைவாக அந்த அணி மயங்க் அகர்வாலை கேப்டன் பொறுப்பிலிருந்து நீக்கியதுடன், அணியிலிருந்தும் வெளியேற்றியது. 

இதையடுத்து நடப்பாண்டு ஷிகர் தவான் தலைமையில் தங்களது முதல் கோப்பையை வெல்லும் கனவோடு அந்த அணி களமிறங்கவுள்ளது. அதற்கேற்றவாறு சாம் காரன், லியாம் லிவிங்ஸ்டோன் உள்ளிட்ட வீரர்களை அதிக விலைக்கு ஏலத்தில் எடுத்துள்ளது. ஆனால் அந்த அணிக்கு பெரும் பின்னடைவாக ஜானி பேர்ட்ஸோவ் நடப்பு ஐபிஎல் தொடரில் பங்கேற்க முடியாமல் போனது. 

இருப்பினும் அணியின் பேட்டிங்கில் ஷிகர் தவான், பனுகா ரஜபக்சா, சிக்கந்தர் ரஸா, ஷாருக் கான், பிரப்ஷிம்ரான் சிங் ஆகியோரும், பந்துவீச்சில் அர்ஷ்தீப் சிங், காகிசோ ரபாடா, ராகுல் சஹார், சாம் கரண் ஆகியோரும் இருப்பது நிச்சயம் அணிக்கு பெரும் பலமாக பார்க்கப்படுகிறது. 

மறுபக்கம் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு ஆரம்பமே அதிர்ச்சியளிக்கும் விதமாக கடந்த சீசனில் அந்த அணியின் கேப்டனாக செயல்பட்ட ஸ்ரேயஸ் ஐயர் காயம் காரணமாக தொடரிலிருந்து விலகினார். அதன்விளையாவாக அனுபவ வீரர் நிதிஷ் ராணா அணியின் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். 

கொல்கத்தா அணியின் பேட்டிங் யுனிட்டைப் பொறுத்தவரையில் வெங்கடேஷ் ஐயர், ரஹ்மனுல்லா குர்பாஸ், நாராயணன் ஜெகதீசன், மந்தீப் சிங், ஆண்ட்ரே ரஸ்ஸல், சுனில் நரைன் ஆகியோரும், பந்துவீச்சில் டிம் சௌதீ, உமேஷ் யாதவ், வருண் சக்ரவர்த்தி, ஷர்துல் தாக்கூர் ஆகியோரும் இருப்பதால் நிச்சயம் இப்போட்டியில் விறுவிறுப்புக்கு பஞ்சமிருக்காது என எதிர்பார்க்கப்படுகிறது. 

நேருக்கு நேர்

  • மோதிய போட்டிகள் - 30
  • பஞ்சாப் கிங்ஸ் - 10
  • கொல்கத்தா நைட் ரைடர்ஸ் - 20

போட்டியை காணும் முறை

இந்த ஆட்டத்தை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தொலைக்காட்சிகள் நேரடி ஒளிபரப்பு செய்கின்றன. இதற்கான டிஜிட்டல் உரிமத்தை வியாகாம்18 நிறுவனம் பெற்றுள்ளது. அந்த நிறுவனம் ஐபிஎல் போட்டியை இணையதளத்தில் 'ஜியோ சினிமா'வில் வர்ணனையுடன் இலவசமாக கண்டுகளிக்க ஏற்பாடு செய்துள்ளது. 

உத்தேச லெவன்

பஞ்சாப் கிங்ஸ் - ஷிகர் தவான் (கே), பிரப்சிம்ரன் சிங், பானுகா ராஜபக்சே, சிக்கந்தர் ராசா, ஜிதேஷ் சர்மா, ஷாருக் கான், சாம் கரன், ரிஷி தவான், ககிசோ ரபாடா, ராகுல் சாஹர், அர்ஷ்தீப் சிங்.

கொல்கத்தா நைட் ரைடர்ஸ் - வெங்கடேஷ் ஐயர், ரஹ்மானுல்லா குர்பாஸ், நாராயன் ஜெகதீசன்/மன்தீப் சிங், நிதிஷ் ராணா(கே), ரின்கு சிங், ஆண்ட்ரே ரசல், சுனில் நரைன், ஷர்துல் தாக்கூர், டிம் சவுத்தி, உமேஷ் யாதவ், வருண் சக்ரவர்த்தி.

ஃபேண்டஸி லெவன்

  • விக்கெட் கீப்பர் - ரஹ்மானுல்லா குர்பாஸ்
  • பேட்டர்ஸ் - ஷிகர் தவான், நிதிஷ் ராணா, ஷாருக்கான்
  • ஆல்-ரவுண்டர்கள் - ஆண்ட்ரே ரஸ்ஸல், சுனில் நரைன், சாம் குர்ரன், சிக்கந்தர் ராசா
  • பந்துவீச்சாளர்கள் - ககிசோ ரபாடா, டிம் சவுத்தி, அர்ஷ்தீப் சிங்.

கேப்டன்/துணைக்கேப்டன் தேர்வு- ஆண்ட்ரே ரஸ்ஸல், சாம் கரன், சிக்கந்தர் ராசா

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள் ::

அதிகம் பார்க்கப்பட்டவை