ஐபிஎல் 2024: பஞ்சாப் கிங்ஸ் vs ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களுரு - உத்தேச லெவன்!

Updated: Thu, May 09 2024 14:58 IST
ஐபிஎல் 2024: பஞ்சாப் கிங்ஸ் vs ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களுரு - உத்தேச லெவன்! (Image Source: Google)

17ஆவது சீசன் ஐபிஎல் தொடரானது இறுதிக்கட்டத்தை நெருங்கியுள்ளது. மொத்தம் 10 அணிகள் பங்கேற்றுள்ள இத்தொடரின் பிளே அஃப் சுற்றுக்கான வாய்ப்பிலிருந்து மும்பை இந்தியன்ஸ் அணி மட்டுமே வெளியேறியுள்ள நிலையில், மீதமுள்ள 9 அணிகளுக்கும் இடையே கடும் போட்டி நிலவி வருகிறது. அந்தவகையில் இன்று நடைபெறும் முக்கியமான லீக் போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் பலப்பரீட்சை நடத்தவுள்ளன. இப்போட்டியில் தோல்வியடையும் அணி பிளே ஆஃப் வாய்ப்பை இழக்கும் என்பதால் இப்போட்டியின் மீதான எதிர்பார்ப்புகளும் அதிகரித்துள்ளன. இந்நிலையில் இவ்விரு அணிகளின் கணிக்கப்பட்ட பிளேயிங் லெவன் குறித்து இப்பதிவில் பார்ப்போம்.

பஞ்சாப் கிங்ஸ்

சாம் கரண் தலைமையிலான பஞ்சாப் கிங்ஸ் அணியானது இதுவரை 11 போட்டிகளில் விளையாடி, 4 வெற்றி, 7 தோல்வியுடன் 8 புள்ளிகள் பெற்றுள்ளது. இதனால் அந்த அணி எஞ்சிய 3 லீக் ஆட்டங்களிலும் வெற்றி பெற்றால் தான் அடுத்த சுற்று வாய்ப்பில் நீடிக்க முடியும் என்ற நெருக்கடியில் உள்ளது. இதில் தோற்றால் அந்த அணியின் அடுத்த சுற்று வாய்ப்பு முடிந்து விடும். மேலும் தோள்பட்டை காயம் காரணமாக கடந்த 6 ஆட்டங்களை தவற விட்ட கேப்டன் ஷிகர் தவான் முழு உடல் தகுதியை எட்டாததால் இன்றைய போட்டியிலும் விளையாடமாட்டார் என்பது அந்த அணிக்கு பெரும் சிக்கலை ஏற்படுத்தியுள்ளது.

பஞ்சாப் அணியின் பேட்டிங் வரிசையைப் பொறுத்தவரையில் ஜானி பேர்ஸ்டோவ், பிரப்ஷிம்ரன் சிங் ஆகியோர் அணிக்கு சிறப்பான தொடக்கத்தை வழங்கி வருகின்றனர். அவரைத்தவிர்த்து ஷஷாங்க் சிங் மற்றும் அஷுதோஷ் சர்மா ஆகியோர் மிடில் ஓவர்களில் அணியின் நம்பிக்கையாக உள்ளனர். ஆனாலும் ரைலீ ரூஸோவ், சாம் கரண், ஜிதேஷ் சர்மா போன்ற வீரர்கள் தொடர்ந்து சொதப்பிவருவது அணிக்கு பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது. பந்துவீச்சைப் பொறுத்தமட்டில் ஹர்ஷல் படேல், அர்ஷ்தீப் சிங், காகிசோ ரபாடா, ஹர்ப்ரீத் பிரார் மற்றும் ராகுல் சஹார் ஆகியோர் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகின்றனர். 

பஞ்சாப் கிங்ஸ் உத்தேச லெவன்: ஜானி பேர்ஸ்டோவ், பிரப்ஷிம்ரன் சிங், ரைலி ரூஸோவ், ஷஷாங்க் சிங், சாம் கரன் (கே), ஜிதேஷ் சர்மா, அஷுதோஷ் சர்மா, ஹர்ப்ரீத் பிரார், ஹர்ஷல் படேல், ககிசோ ரபாடா, அர்ஷ்தீப் சிங்

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு

ஃபாஃப் டூ பிளெசிஸ் தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும் இதுவரை விளையாடியுள்ள 11 போட்டிகளில் 4 வெற்றி, 7 தோல்வியுடன் 8 புள்ளிகள் பெற்று அடுத்த சுற்றுக்கான வாய்ப்பில் நூலிழையில் உள்ளது. இதனால் எஞ்சிய 3 போட்டிகளிலும் ஆர்சிபி அணி வென்றால் மட்டுமே அடுத்த சுற்றுக்கான வாய்ப்பில் தொடர முடியும் என்பதால் இப்போட்டியின் மீது கூடுதல் கவனம் செலுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேற்கொண்டு கடந்த போட்டியில் கேப்டன் டூ பிளெசிஸ் மற்றும் விராட் கோலி இருவரும் அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தியது அணிக்கு நம்பிக்கை அளிக்கும் விதமாக பார்க்கப்படுகிறது. 

அதேசமயம் ராஜத் பட்டிதார், கிளென் மேக்ஸ்வெல், வி ஜேக்ஸ், தினேஷ் கார்த்திக் உள்ளிட்ட வீரர்கள் தொடர்ந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்டுள்ளனர். அவர்களும் சிறப்பாக விளையாடும் நிலையில் நிச்சயம் ஆர்சிபி அணி வெற்றிபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. இருப்பினும் அணியின் பந்துவீச்சு தான் பெரும் தலைவலியாக இருந்து வருகிறது. ஏனெனில் முகமது சிராஜ், யாஷ் தயாள், வைசாக் விஜய குமார், கரண் சர்மா, வில் ஜேக்ஸ், ஸ்வப்நில் சிங் உள்ளிட்ட வீரர்கள் விக்கெட்டுகளை கைப்பற்றினாலும், ரன்களை வரி வழங்குவதை கட்டுப்படுத்த வேண்டிய சூழலிற்கு தள்ளப்பட்டுள்ளது. 

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு உத்தேச லெவன்: விராட் கோலி, ஃபாஃப் டு பிளெஸ்ஸிஸ் (கே), ராஜத் பட்டிதார், வில் ஜாக்ஸ், கிளென் மேக்ஸ்வெல், கேமரூன் கிரீன், தினேஷ் கார்த்திக், கர்ண் சர்மா, ஸ்வப்னில் சிங், முகமது சிராஜ், யாஷ் தயாள்.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை