பாகிஸ்தான் - நியூசிலாந்து போட்டிக்கு டிக்கெட்டுகள் இலவசம் - பிசிபி! 

Updated: Sun, Jan 01 2023 13:19 IST
PCB Announces Free Entry For Fans For The Second Test Between Pakistan, New Zealand
Image Source: Google

பாகிஸ்தானுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள நியூசிலாந்து அணி அங்கு 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் ஆடுகிறது. பாகிஸ்தான் - நியூசிலாந்து அணிகள் இடையிலான முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி கராச்சியில் நடந்தது. 

இதில் முதலில் பேட் செய்த பாகிஸ்தான் 438 ரன்கள் சேர்த்தது. இதையடுத்து தனது முதல் இன்னிங்சை தொடங்கிய நியூசிலாந்து அணி கேன் வில்லியம்சனின் இரட்டை சதத்தின் உதவியுடன் 612 ரன்கள் குவித்தது.

இதையடுத்து தனது 2-வது இன்னிங்சை தொடங்கிய பாகிஸ்தான் அணி 8 விக்கெட் இழப்புக்கு 311 ரன்கள் குவித்து டிக்ளேர் செய்தது. இதனால் நியூசிலாந்து அணிக்கு 138 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்ட்டது. தொடர்ந்து விளையாடிய நியூசிலாந்து அணி 5வது நாள் ஆட்ட நேர முடிவில் ஒரு விக்கெட் இழப்பிற்கு 61 ரன்கள் எடுத்தது .இதனால் போட்டி 'டிரா' ஆனது.

இதையடுத்து இவ்விரு அணிகள் இடையிலான 2ஆவது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி வரும் 2ஆம் தேதி கராச்சியில் தொடங்குகிற்து. இந்நிலையில் பாகிஸ்தான் - நியூசிலாந்து அணிகள் இடையிலான கடைசி டெஸ்ட் போட்டி நடக்கும் கராச்சியில் வாடிக்கையாளர்களுக்கு இலவ டிக்கெட் என அறிவிக்கப்பட்டுள்ளது.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள் ::

அதிகம் பார்க்கப்பட்டவை