பிஎஸ்எல் என்றழைக்கப்படும் பாகிஸ்தான் சூப்பர் லீக் தொடரின் 10ஆவது சீசன் பாகிஸ்தானின் பல்வேறு நகரங்களில் நடைபெற்று வந்தது. பின்னர் இந்தியா-பாகிஸ்தான் இடையேயான போர் பதற்றம் காரணமாக எஞ்சிய 8 போட்டிகளை வேறு இடத்திற்கு மாற்ற பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் முடிவு செய்தது.

Advertisement

மேற்கொண்டு இத்தொடரில் பங்கேற்றிருந்த பல வெளிநாட்டு வீரர்களும் ஏற்கனவே பாகிஸ்தானை விட்டு ஐக்கிய அரபு எமிரேட்ஸுக்குச் சென்றதன் காரணமாக, இத்தொடரின் எஞ்சிய போட்டிக்கள் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடத்த பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் திட்டமிட்டிருந்தது. ஆனால் ஐக்கிய அரபு அமீரக கிரிக்கெட் வாரியம் பாகிஸ்தான் சூப்பர் லீக் தொடரின் நடத்துவதற்கான அனுமதியை மறுத்ததாக கூறப்பட்டது. இதனால் தொடரின் எஞ்சிய போட்டிகள் அனைத்தும் ஒத்திவைக்கப்பட்டன. 

Advertisement

இந்நிலையில் ஒத்திவைக்கப்பட்ட பாகிஸ்தான் சூப்பர் லீக் தொடரின் எஞ்சிய போட்டிகளை மே 17ஆம் தேதி முதல் மீண்டும் தொடங்கவுள்ளதாக பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் இன்று அறிவித்துள்ளது. அதன்படி மே 17ஆம் தேதி முதல் மீண்டும் நடைபெறவுள்ள இத்தொடரின் இறுதிப்போட்டியானது மே 26ஆம் தேதி நடைபெறும் என்றும், இருப்பினும் எஞ்சிய போட்டிகளுக்கான மைதானம் மற்றும் நேரம் குறித்த அட்டவணை கூடிய விரைவில் அறிவிக்கப்படும் என்றும் பிசிபி தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இதுகுறித்து பாகிஸ்தான் கிரிக்கெட் வாரிய தலைவர் மோஹ்சின் நக்வி தனது எக்ஸ் பக்கத்தில், “பாகிஸ்தான் சூப்பர் லீக் தொடரின் 10ஆவது சீசன், விட்ட இடத்திலிருந்து மீண்டும் நடைபெறவுள்ளது. மொத்தம் 6 அணிகள் 0 பயம். இத்தொடரின் எஞ்சிய போட்டிகள் எதிர்வரும் மே 17 ஆம் தேதி தொடங்குவதுடன், தொடரின் இறுதிப்போட்டியானது மே 25 ஆம் தேதி நடைபெறும். 8 விறுவிறுப்பான போட்டிகளுக்குத் தயாராகுங்கள். அனைத்து அணிகளுக்கும் வாழ்த்துக்கள்” என்று பதிவுசெய்துள்ளார். 

Also Read: LIVE Cricket Score

முன்னதாக இந்தியாவில் நடைபெற்று வந்த 18ஆவது சீசன் ஐபிஎல் தொடரும் இந்தியா - பாகிஸ்தான் இடையேயான போர் பதற்றம் காரணமாக ஒருவார காலம் இடை நிறுத்தப்பட்து. தற்போது இந்த பிரச்சனைகள் ஓய்ந்துள்ள நிலையில் 18ஆவது சீசன் ஐபிஎல் தொடரின் எஞ்சிய போட்டிகள் எதிவரும் மே 17ஆம் தேதி முதல் மீண்டும் தொடங்கும் என்றும், இறுதிப்போட்டியானது ஜூன் 3ஆம் தேதி நடைபெறும் என்றும் அறிவிக்கப்பட்டிந்தது குறிப்பிடத்தக்கது. 

Advertisement

About the Author

Bharathi Kannan
Bharathi Kannan - He is very interested in cricket. Participated in Domestic level cricket matches. He has experience working in sports news in various media. He has the experience of providing news from different angles non-stop in all types of cricket series like IPL, World Cup. He is also very interested in sports news including cricket, tennis, football and kabaddi. பாரதி கண்ணன் - கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு ஊடகங்களிலும் விளையாட்டு செய்திகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட் என அனைத்து வடிவிலான கிரிக்கெட் தொடர்களின் போதும் இடைவிடாது பல்வேறு கோணங்களில் செய்திகளை அளித்த அனுபவம் உண்டு. கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், கால்பந்து, கபடி உள்ளிட்ட இதர விளையாட்டு செய்திகளிலும் அதீத ஆர்வமுள்ளவர். Read More
Latest Cricket News