பாகிஸ்தான் அணியின் பயிற்சியாளராக பிராட்பர்ன் நியமனம்!

Updated: Sat, May 13 2023 22:44 IST
Image Source: Google

ஐசிசி ஒருநாள் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரும் வரும் அக்டோபர் மாதம் இந்தியாவில் நடைபெற்றுவருகிறது. இத்தொடருக்காக அனைத்து அணிகளும் தீவிரமாக தயாராகி வருகிறது. அந்தவரிசையில் பாபர் ஆசாம் தலைமையிலான பாகிஸ்தான் அணியும் கோப்பையைக் கைப்பற்றி தீவிர முயற்சியில் இறங்கியுள்ளது.

அந்த வகையில் சமீபத்தில் நடைபெற்ற நியூசிலாதுக்கு எதிரான ஒருநாள் தொடரையும் பாகிஸ்தான் அணி 4-1 என்ற கணக்கில் கைப்பற்றி அசத்தியிருந்தது. இந்நிலையில் தற்போது அந்த அணி புதிய பயிற்சியாளர்களை நியமித்துள்ளது. 

அதன்படி பாகிஸ்தான் ஆடவர் கிரிக்கெட் அணியின் தலைமைப் பயிற்சியாளராக நியூசிலாந்து முன்னாள் வீரர் கிராண்ட் பிராட்பர்ன் நியமிக்கப்பட்டுள்ளார். அதேபோல், தென் ஆப்பிரிக்க முன்னாள் வீரர் ஆண்ட்ரூ புட்டிக், பாகிஸ்தானின் பேட்டிங் பயிற்சியாளராகத் தேர்வாகியுள்ளார். இருவரும் இரு ஆண்டுகளுக்கு ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்கள்.

முன்னதாக பிராட்பர்ன், ஸ்காட்லாந்து அணியின் தலைமைப் பயிற்சியாளராக இருந்துள்ளார். 2018 முதல் 2020 வரை பாகிஸ்தான் அணியின் ஃபீல்டிங் பயிற்சியாளராக செயல்பட்டார். இதைத் தொடர்ந்து, லாகூரிலுள்ள தேசிய கிரிக்கெட் அகாடமிக்கு மாற்றப்பட்டார். அண்மையில் நடைபெற்ற நியூசிலாந்துக்கு எதிரான தொடரில் அந்த அணியின் ஆலோசகராக செயல்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது. 

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள் ::

அதிகம் பார்க்கப்பட்டவை