நியூசிலாந்து மீது புகாரளித்த பாகிஸ்தான்; ஐசிசியின் நடவடிக்கை என்ன?

Updated: Sat, Sep 18 2021 12:16 IST
Image Source: Google

நியூசிலாந்து கிரிக்கெட் அணி 18 ஆண்டுகளுக்கு பிறகு 3 ஒருநாள் மற்றும் ஐந்து டி20 போட்டிகளில் விளையாடுவதற்காக பாகிஸ்தான் சென்றது. கரோனா பாதிப்பு காரணமாக மைதானத்தில் 25 சதவீத ரசிகர்கள் மட்டுமே அனுமதிக்க பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் முடிவு செய்து இருந்தது. 

இந்நிலையில் முதல் ஒருநாள் போட்டி ராவல்பிண்டியில் நேற்று நடைபெற இருந்தது. ஆனால் போட்டி தொடங்க சில நிமிடங்களே இருந்த நிலையில் பாகிஸ்தான் தொடரை பாதுகாப்பு காரணங்களுக்காக ரத்து செய்வதாக நியூசிலாந்து கிரிக்கெட் வாரியம் அறிவித்தது. 

நியூசிலாந்து அணி திடீரென தொடரை கைவிட்டதால் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் மிகுந்த கோபமடைந்துள்ளது. 
இதுதொடர்பாக அந்நாட்டு கிரிக்கெட் வாரிய தலைவரும், முன்னாள் கேப்டனுமான ரமீஸ் ராஜா கூறுகையில், “நியூசிலாந்து அணியின் முடிவு சிறுபிள்ளைதனமானது. வெறும் பாதுகாப்பு மிரட்டல் தொடர்பாக தொடரில் விளையாடாமல் வெளியேறுவது எங்களுக்கும், ரசிகர்களுக்கும் ஏமாற்றமாக உள்ளது.

நியூசிலாந்து தன்னிச்சையாக இந்த முடிவை அறிவித்துள்ளது. போட்டிகளின் போது பலத்த பாதுகாப்புக்கு பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் ஏற்பாடு செய்து இருந்தது. எங்கள் பிரதமர் இம்ரான்கானும் இது தொடர்பாக நியூசிலாந்து அரசுடன் பேசினார். நியூசிலாந்து அணிக்கு பாதுகாப்பில் எந்த குறைபாடும் இல்லை என விளக்கினோம்” என்று தெரிவித்தார்.

Also Read: இந்திய அணியின் இங்கிலாந்து சுற்றுப்பயணம், 2021

இதற்கிடையே தொடரை விளையாடாமலேயே ரத்து செய்த நியூசிலாந்து அணி மீது சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலிடம் (ஐ.சி.சி.) பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் புகார் அளித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை