டி20 உலகக்கோப்பை: புதிய ஜெர்சியை அறிமுகப்படுத்திய பாகிஸ்தான்!

Updated: Mon, Sep 19 2022 22:44 IST
Image Source: Google

ஏழாவது டி 20 ஓவர் உலக கோப்பை போட்டி அக்டோபர் 16ஆம் தேதி முதல் நவம்பர் 13ஆம் தேதி வரை ஆஸ்திரேலியாவில் நடக்கிறது. டி20 உலக கோப்பையில் மொத்தம் 16 நாடுகள் பங்கேற்கின்றன.

நடப்பு சாம்பியன் ஆஸ்திரேலியா, இந்தியா, இங்கிலாந்து, நியூசிலாந்து, தென் ஆப்பிரிக்கா, பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், வங்கதேசம் ஆகிய 8 நாடுகள் நேரடியாக சூப்பர் 12 சுற்றில் விளையாடும்.

இந்த உலக கோப்பை தொடருக்கான 15 பேர் கொண்ட பாகிஸ்தான் அணி கடந்த சில தினங்களுக்கு முன் அறிவிக்கப்பட்டது. கேப்டன் பாபர் அசாம் தலைமையிலான பாகிஸ்தான் அணியில் ஷதாப் கான் (துணை கேப்டன்), ஆசிப் அலி, ஹைதர் அலி, ஹாரிஸ் ரவூப், இப்திகார் அகமது, குஷ்தில் ஷா, முகமது ஹஸ்னைன், முகமது நவாஸ், முகமது ரிஸ்வான், முகமது வாசிம், நசீம் ஷா, ஷஹீன் ஷா அப்ரிடி, ஷான் மசூத், உஸ்மான் காதர் ஆகியோர் இடம் பெற்றுள்ளனர்.

 

இந்த நிலையில் பாகிஸ்தான் கிரிக்கெட் அணிக்கு புதிய டி20 ஜெர்சியை பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் இன்று அறிமுகம் செய்துள்ளது. உலக கோப்பை தொடரில் இன்று அறிமுகம் செய்யப்பட்ட புதிய ஜெர்சியுடன் பாகிஸ்தான் அணி வீரர்கள் களமிறங்க உள்ளனர்.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை