சாம்பியன்ஸ் கோப்பை தொடரில் இருந்து விலகியது ஏன்? - ஸ்டார்க் விளக்கம்!

Updated: Thu, Feb 27 2025 15:27 IST
Image Source: Google

ஐசிசி ஆடவர் சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் தொடரின் 2025ஆம் ஆண்டு சீசன் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இதில் குரூப் ஏ பிரிவில் இருந்து இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகள் அரையிறுதிச்சுற்றுக்கு முன்னேறியுள்ளன. அதேசமயம் குரூப் பி பிரிவில் இங்கிலாந்து அணி லீக் சுற்றோடு தொடரில் இருந்து விலகியுள்ளது. 

இதனால் தென் ஆப்பிரிக்கா, ஆஸ்திரேலியா மற்றும் ஆஃப்கானிஸ்தான் அணிகளுக்கு இடையே கடும் போட்டி நிலவி வருகிறது. இதில் ஆஸ்திரேலியா - ஆஃப்கானிஸ்தான் அணிகளுக்கு இடையேயான லீக் போட்டி நாளை நடைபெறவுள்ளது. இப்போட்டியின் வெற்றி தோல்வியின் முடிவிலேயே குரூப் பி பிரிவில் இருந்து எந்த இரண்டு அணிகள் அடுத்த சுற்றுக்கு முன்னேறும் என்ற எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளன. 

இந்நிலையில் நடப்பு சம்பியன்ஸ் கோப்பை தொடருக்கு முன்னதாக ஆஸ்திரேலிய அணியின் நட்சத்திர வேகப்பந்து வீச்சாளர் தனிப்பட்ட காயம் காரணமாக தொடரில் இருந்து விலகினார். இருப்பினும் அவர் விலகியதற்கான காரணம் ஏதும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படவில்லை. இந்நிலையில், சாம்பியன்ஸ் கோப்பை தொடரில் இருந்து விலகியதற்கான காரணத்தை மிட்செல் ஸ்டார்க் கூறியுள்ளார். 

இதுகுறித்து பேசிய அவர், “நான் தொடரில் இருந்து விலகியதற்கு சில காரணங்களும், சில தனிப்பட்ட கருத்துக்களும் உள்ளன. இலங்கை டெஸ்ட் தொடரின் போது எனக்கு கொஞ்சம் கணுக்கால் வலி இருந்தது, எனவே நான் அதை சரியாகப் புரிந்து கொள்ள வேண்டும். மேலும் ஐசிசி டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் விளையாடவும், அதன் பின் வெஸ்ட் இண்டீஸ் சுற்றுப்பயணத்திற்கும் நான் தயாராக விரும்பினேன். 

மேலும் அடுத்த மாதம் ஐபிஎல் தொடரிலும் விளையாடவுள்ளேன். ஆனால் தற்போது டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் விளையாடுவதுதான் முக்கியம் என்று நினைக்கிறேன். அதனால் நான் தற்போது எனது உடற்தகுதியில் கவனம் செலுத்துவதுடன், டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டிக்க தயாராக வேண்டும் என்று எண்ணினேன்.  உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் அறிமுகப்படுத்தப்பட்டபோது, ​​அது பெரிய விஷயமல்ல என்று நினைத்தது எனக்கு நினைவிருக்கிறது.

Also Read: Funding To Save Test Cricket

ஆனால் தொடக்க சீசனில் நாங்கள் இறுதிப்போட்டி வரை நெருங்கிய நிலையிலும், எங்களால் இறுதிப்போட்டிக்கு முன்னேற முடியவில்லை. மேலும் அப்போட்டியை தொலைக்காட்சியில் பார்த்த போது நிச்சயம் அதில் பங்கேற்க வேண்டும் என்று விரும்பினேன். அதன்படி நாங்கள் கடந்த முறை அதில் சாம்பியன் பட்டத்தையும் வென்றோம். இப்போது இரண்டாவது முறையாக அதை வெல்லும் வாய்ப்பு எங்களுக்கு கிடைத்துள்ளது. அதனால் அதற்கு நான் தயாராகி வருகிறேன்” என்று தெரிவித்துள்ளார். 

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள் ::

அதிகம் பார்க்கப்பட்டவை