WI vs NZ, 2nd T20I: பிலீப்ஸ் அதிரடி; தொடரை வென்றது நியூசிலாந்து!

Updated: Sat, Aug 13 2022 12:28 IST
Image Source: Google

நியூசிலாந்து கிரிக்கெட் அணி 3 டி20 மற்றும் 3 ஒருநாள் போட்டிகளில் விளையாடுவதற்காக வெஸ்ட் இண்டீஸ் சென்றுள்ளது. இதில் ஏற்கெனவே நடந்து முடிந்த முதல் டி20 போட்டியில் நியூசிலாந்து அணி விண்டீஸை வீழ்த்தி 1-0 என்ற கணக்கில் முன்னிலைப் பெற்றது.

இந்நிலையில் இரு அணிகளுக்கும் இடையேயான 2வது டி20 ஓவர் போட்டி கிங்ஸ்டனில் நேற்று நடைபெற்றது. இப்போட்டியில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணி முதலில் பேட்டிங் செய்ய தீர்மானித்து களமிறங்கியது.

அதன்படி முதலில் ஆடிய நியூசிலாந்து அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 5 விக்கெட் இழப்புக்கு 215 ரன்கள் குவித்தது. அந்த அணியில் கிளென் பிலிப்ஸ் அதிரடியாக விளையாடி 41 பந்தில் 76 ரன்னும், டேரில் மிட்செல் 20 பந்தில் 48 ரன்னும் குவித்தனர். டேவன் கான்வே 34 பந்தில் 42 ரன்னும் எடுத்தனர். வெஸ்ட் இண்டீஸ் சார்பில் ஒபெட் மெக்காய் 3 விக்கெட் கைப்பற்றினார்.

இதையடுத்து, 216 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இமாலய இலக்கை நோக்கி வெஸ்ட் இண்டீஸ் அணி களமிறங்கியது. ஆனால் அந்த அணியில் நட்சத்திர வீரர்கள் கைல் மேயர்ஸ், ஷமாரா ப்ரூக்ஸ், நிக்கோலஸ் பூரன், டெவன் தாமஸ் என அனைவரும் ஒற்றை இலக்க ரன்களோடு பெவிலியனுக்கு திரும்பினார்.

அதன்பின் களமிறங்கிய வீரர்களும் சொற்ப ரன்களில் பெவிலியன் திரும்ப, அந்த அணி 20 ஓவரில் 9 விக்கெட் இழப்புக்கு 125 ரன் மட்டுமே எடுத்தது. இதனால் அந்த அணி 90 ரன் வித்தியாசத்தில் தோற்றது. நியூசிலாந்து தரப்பில் மிட்செல் சாண்ட்னர், மைக்கேல் பிரேஸ்வெல் தலா 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றினர்.

இந்த வெற்றியின் மூலம் 3 போட்டி கொண்ட டி20 தொடரை நியூசிலாந்து 2-0 என கைப்பற்றியுள்ளது. இதையடுத்து இரு அணிகளுக்கும் இடையேயான மூன்றாவது டி20 போட்டி நாளை நடக்கிறது. 

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை