ஐபிஎல் 2022: தோல்விக்கு பின் பேசிய ரிஷப் பந்த்!

Updated: Sun, May 22 2022 11:56 IST
Image Source: Google

ஐபிஎல் தொடரின் 69வது லீக் போட்டியில் நேற்று டெல்லி மற்றும் மும்பை அணிகள் மோதின. டெல்லி அணி வெற்றி பெற்றால் தான் ப்ளே ஆஃப் செல்ல முடியும் என்ற சூழலில் இந்த போட்டி நடைபெற்றது.

அதன்படி டெல்லி அணியின் கையில் தான் வெற்றி வாய்ப்பு இருந்தது. ஆனால் ஒரே ஒரு முடிவு எடுக்கும் வரை. டெல்லி நிர்ணயித்த 160 என்ற இலக்கை நோக்கி களமிறங்கிய மும்பை அணி 95 ரன்களுக்கெல்லாம் 3 விக்கெட்களை இழந்து தடுமாறியது. கடைசி நம்பிக்கையாக இருந்த டிம் டேவிட்டும் சீக்கிரமாக அவுட்டாகியிருக்க வேண்டும்.

டிம் டேவிட் களமிறங்கிய முதல் பந்திலேயே பந்து எட்ஜாகி கேட்ச் ஆனது. ஆனால் கள நடுவர் இதற்கு அவுட் தர மறுத்தார். பந்து பேட்டில் எட்ஜானது நன்கு தெரிந்தது. ஆனால், ரிஷப் பண்ட் தன்வசம் 2 ரிவ்யூவ் வைத்திருந்தும் எடுக்க மறுத்தார். இது ஏன் என்றே யாருக்கும் புரியவில்லை. கடைசியில் டிம் டேவிட் தான் எமனாக அமைந்தார். 11 பந்துகளில் 34 ரன்களை விளாசி வெற்றிக்கு காரணமாக அமைந்தார். இதனால் ரிஷப் பண்ட் மீது விமர்சனங்கள் குவிந்தன.

இந்நிலையில் ரிவ்யூவ் எடுக்காதது ஏன் என்பது குறித்து பந்த் பேசியுள்ளார். அதில், “எனக்கு கேட்ச் நன்றாக தான் வந்தது. பேட்டில் பட்டதால், ரிவ்யூவ் எடுத்திருக்கலாம். ஆனால் அருகே இருந்த எங்கள் யாருக்குமே அது உறுதியாக தெரியவில்லை. பேட்டில் படவில்லை என்று தான் நினைத்தோம். சக வீரர்களும் உறுதிபட கூறவில்லை. அதனால் ரிவ்யூவ் எடுக்காமல் விட்டுவிட்டேன் எனக்கூறினார்.

தொடர்ந்து பேசிய அவர், நடப்பு சீசனில் தொடர்ந்து சிறப்பாக தான் ஆடினோம். இன்று தான் சரியாக செயல்படவில்லை. இதற்கு காரணம் அதிகப்படியான அழுத்தம் தான். 5 - 7 ரன்கள் குறைவாக அடித்துவிட்டோம். தவறுகளை சரிசெய்துக்கொண்டு அடுத்தாண்டு பலமான கம்பேக் கொடுப்போம்” என தெரிவித்துள்ளார்.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை