இந்தியாவின் ஏபிடி சூர்யகுமார் யாதவ் தான் - ரிக்கி பாண்டிங் புகழாரம்!

Updated: Tue, Aug 16 2022 13:53 IST
Image Source: Google

ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் ஆகஸ்ட் 27 முதல் செப்டம்பர் 11 வரை ஐக்கிய அரபு அமீரகத்தில் நடக்கிறது. ஆகஸ்ட் 28ஆம் தேதி கிரிக்கெட் ரசிகர்களால் பெரிதும் எதிர்பார்க்கப்படும் இந்தியா - பாகிஸ்தான் போட்டி நடக்கிறது. இந்த ஆசிய கோப்பையில் இந்தியாவும் பாகிஸ்தானும் 3 முறை மோதும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில் ஆசிய கோப்பையை இந்திய அணி தான் வெல்லும் என்று ரிக்கி பாண்டிங் ஏற்கனவே கருத்து கூறிய நிலையில், உலகக்கோப்பை டி20 தொடரில் இந்திய அணி செய்ய வேண்டியது குறித்தும் அவர் பேசியுள்ளார்.

இது தொடர்பாக அவர் அளித்துள்ள பேட்டியில், “இந்திய கிரிக்கெட் அணியின் ஏ பி டிவில்லியர்ஸ் போல் சூரியகுமார் யாதவ் செயல்படுகிறார். ஏபி டிவில்லியர்ஸ் 360 டிகிரியில் ரன் குவிப்பார். அதேபோல் சூரிய குமார் யாதவும் ரன் அடித்து வருகிறார். சூரியகுமார் அடிக்கும் சில ஷாட்டுகள் எல்லாம் பிரமிக்கும் வகையில் இருக்கிறது.

சூரியகுமார் பேட்டிங் நிச்சயம் பந்துச்சாளர்களுக்கு நெருக்கடி அளிக்கும் விதமாக இருக்கிறார். மேலும் சூரிய குமார் யாதவ் வேகபந்துவீச்சு, சுழற் பந்துவீச்சு என அனைத்தையும் அதிரடியாக எதிர் கொள்கிறார். டி20 உலக கோப்பைக்கான இந்திய அணியில் சூரியகுமார் யாதவும் கண்டிப்பாக இடம்பெற வேண்டும். ஆஸ்திரேலிய ரசிகர்கள் சூரியக்குமாரின் ஆட்டத்தைக் கண்டு மகிழ்ச்சி அடைவார்கள்.

சூரியகுமார் யாதவ் நம்பிக்கை மிகுந்த வீரர். அவருக்கு ஏதாவது சவாலை கொடுத்தால் அதை கண்டிப்பாக எதிர்கொள்ளும் திறமை அவருக்கு உள்ளது. எந்த சூழ்நிலையிலும் சூரியகுமார் யாதவ் களத்துக்கு சென்றால் அணிக்கு வெற்றியை தேடி தருவார். சூரியகுமாரியாவும் பேட்டிங் வரிசையில் நம்பர் நான்காவது வீரராக களமிறங்க வேண்டும் அவருக்கு ஓப்பனிங் பேட்ஸ்மேன் என்ற பொறுப்பு சரிவராது.

என்னை பொறுத்தவரை விராட் கோலிக்கு நம்பர் 3 என்ற இடத்தை கொடுத்து விட வேண்டும். தொடக்க வீரர்களாக ரோஹித் சர்மா கேஎல் ராகுல் இருப்பார்கள். இதனால் இந்த நான்கு பேர் தான் டி20 உலக கோப்பையில் இந்திய அணியில் இருக்க வேண்டும். அவர் யாதவ் நடு வரிசையில் களமிறங்குவது மிகவும் முக்கியம்.

ஏனெனில் சூரியகுமார் யாதவ் டி20 கிரிக்கெட்டில் 34 பந்துகளை எதிர்கொண்டு 88 ரன்களை அடித்துள்ளார்.அவருடைய ஸ்ட்ரைக் ரேட் ஆட்டத்தின் இறுதி கட்டத்தில் 258 என்ற அளவில் இருக்கிறது. 23 போட்டிகளில் விளையாடி 672 ரன்கள் விளாசி உள்ள சூரியகுமார் யாதவ் தற்போது டி20 தரவரிசை பட்டியலில் இரண்டாவது இடத்தில் இருக்கிறார்” என்று தெரிவித்துள்ளார்.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை