சமிந்தா வாஸின் சாதனையை சமன்செய்த பிரபாத் ஜெயசூர்யா!

Updated: Sat, Jun 28 2025 16:31 IST
Image Source: Google

Prabath Jayasuriya Test Fifer: சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் ஒரு இன்னிங்ஸில் அதிகமுறை 5 விக்கெட்டுகளை கைப்பற்றிய இலங்கை வீரர்கள் பட்டியலில் பிரபாத் ஜெயசூர்யா மூன்றாம் இடத்திற்கு முன்னேறியுள்ளார். 

இலங்கை- வங்கதேசம் அணிகளுக்கு இடையேயான 2ஆவது டெஸ்ட் போட்டி கொழும்புவில் நடைபெற்றது. இப்போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங்செய்த வங்கதேச அணி முதல் இன்னிங்ஸில் 247 ரன்னில் ஆல்அவுட்டானது. பின்னர் முதல் இன்னிங்ஸை தொடங்கிய இலங்கை அணியில் தொடக்க வீரர் பதும் நிஷங்கா சதமடித்து அசத்தினார். மேலும் தினேஷ் சண்டிமால், குசால் மெண்டிஸ் ஆகியோரும் அரைசதம் கடக்க அந்த அணி முதல் இன்னிங்ஸில் 458 ரன்களைக் குவித்தது. 

பின்னர் 211 ரன்கள் பின்தங்கிய நிலையில் இரண்டாவது இன்னிங்ஸை தொடங்கிய வங்கதேச அணி தொடக்கம் முதலே சீரான இடைவேளையில் விக்கெட்டுகளை இழந்து தடுமாறியதுட 133 ரன்களில் ஆல் அவுட்டானது. இதன்மூலம் இலங்கை அணி இன்னிங்ஸ் மற்றும் 78 ரன்கள் வித்தியாசத்தில் வங்கதேச அணியை வீழ்த்தியதுடன், இந்த டெஸ்ட் தொடரை 1-0 என்ற கணக்கில் கைப்பற்றியும் சத்தியுள்ளது. மேலும் இப்போட்டியின் ஆட்டநாயகனாக பதும் நிஷங்கா தேர்வு செய்யப்பட்டார்.

இந்நிலையில் இப்போட்டியின் இரண்டாவது இன்னிங்ஸில் இலங்கை சுழற்பந்து வீச்சாளர் பிரபாத் ஜெயசூர்யா அற்புதமாக பந்துவீச்சை வெளிப்படுத்தி 18 ஓவர்களில் 56 ரன்களுக்கு 5 விக்கெட்டுகளை வீழ்த்தினார். இதில் அவர் வங்கதேச அணியின் நட்சத்திர வீரர்களான ஷாத்மான் இஸ்லாம், மோமினுல் ஹக், முஷ்ஃபிக்கூர் ரஹீம், லிட்டன் தாஸ் மற்றும் நயீம் ஹசன் ஆகியோரின் விக்கெட்டுகளை வீழ்த்தி அணியின் வெற்றிக்கு உறுதுணையாக இருந்தார்.

இந்நிலையில் இப்போட்டியில் அவர் அரைசதம் கடந்ததன் மூலம் சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் இலங்கை அணிக்காக ஒரு இன்னிங்ஸில் அதிக முறை 5 விக்கெட்டுகளை கைப்பற்றிய வீரர்கள் பட்டியலில் மூன்றாம் இடத்திற்கு முன்னேறியுள்ளார். முன்னதாக இலங்கை அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் சமிந்தா வாஸும் 111 டெஸ்ட் போட்டிகளில் 194 இன்னிங்ஸ்களில் விளையாடி 12 முறை 5 விக்கெட்டுகளை கைப்பற்றி மூன்றாம் இடத்தில் இருந்தார். 

Also Read: LIVE Cricket Score

இந்நிலையில் தற்போது பிரபாத் ஜெயசூர்யா 22 டெஸ்ட் போட்டிகளில் 41ஆவது இன்னிங்ஸில் 12வது முறையாக ஒரு இன்னிங்ஸில் ஐந்து விக்கெட்டுகளை வீழ்த்தி சமிந்தா வாஸின் சாதனையை அவர் சமன் செய்துள்ளார். அதேசமயம் இந்த பட்டியலில் இலங்கை அணியின் முன்னாள் ஜாம்பவான்கள் முத்தையா முரளிதரன் 67 முறையும், ரங்கனா ஹெர்த் 34 முறையும் ஒரு இன்னிங்ஸில் 5 விக்கெட்டுகளை வீழ்த்தி முதலிரண்டு இடங்களில் உள்ளது குறிப்பிடத்தக்கது. 

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள் ::

அதிகம் பார்க்கப்பட்டவை