ஐபிஎல் 2025: பஞ்சாப் கிங்ஸ் அணிக்காக தனித்துவ சாதனை படைத்த பிரப்ஷிம்ரன் சிங்!

Updated: Sun, Apr 27 2025 12:03 IST
Image Source: Google

ஐபிஎல் தொடரில் நேற்று நடைபெற்ற லீக் போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் பஞ்சாப் கிங்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. கொல்கத்தாவில் உள்ள ஈடன் கார்டன்ஸ் மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்ற பஞ்சாப் கிங்ஸ் அணி முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது. 

அதன்படி களமிறங்கிய பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு பிரியான்ஷ் ஆர்யா மற்றும் பிரப்ஷிம்ரன் சிங் இணை அபாரமான தொடக்கத்தைக் கொடுத்ததுடன் முதல் விக்கெட்டிற்கு 120 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து அணிக்கு தேவையான அடித்தளத்தை அமைத்துக் கொடுத்தனர். இதில் இருவரும் அரைசதம் கடந்த நிலையில் அதிரடியாக விளையாடி வந்த பிரியான்ஷ் ஆர்யா 8 பவுண்டரிகள், 4 சிக்ஸர்கள் என 69 ரன்களிலும், பிரப்ஷிம்ரன் சிங் 6 பவுண்டரிகள், 6 சிக்ஸர்கள் என 83 ரன்களிலும் என விக்கெட்டை இழந்தனர். 

அவர்களைத் தொடர்ந்து களமிறங்கிய வீரர்களில் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர் 25 ரன்களையும், ஜோஷ் இங்கிலிஸ் 11 ரன்களையும் சேர்த்தனர். இதன்மூலம் பஞ்சாப் கிங்ஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட்டுகளை இழந்து 201 ரன்களைச் சேர்த்தது. கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி தரப்பில் வைபவ் அரோரா 2 விக்கெட்டுகளை கைப்பற்றிய நிலையில், வருண் சக்ரவர்த்தி மற்றும் ஆண்ட்ரே ரஸல் ஆகியோர் தலா ஒரு விக்கெட்டை கைப்பற்றினர்.

அதன்பின் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி இலக்கை நோக்கி விளையாடிய நிலையில் மழை குறுக்கீடின் காரணமாக ஆட்டம் தடைபட்டது. பின்னர் தொடர் மழை காரணமாக கொல்கத்தா நைட் ரைடர்ஸ் - பஞ்சாப் கிங்ஸ் அணிகளுக்கு இடையேயான இந்த போட்டி கைவிடப்படுவதாக அறிவிக்கப்பட்டது. இதன் காரணமாக இரு அணிகளுக்கும் தலா ஒரு புள்ளி பகிர்ந்தளிக்கப்படுவதாக ஐபிஎல் நிர்வாகம் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் இப்போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் அணியின் தொடக்க வீரர் பிரப்ஷிப்ரன் சிங் சாதனை ஒன்றை படைத்துள்ளார். அதன்படி இப்போட்டியில் அரைசதம் கடந்த பிரப்ஷிம்ரன் சிங் பஞ்சாப் கிங்ஸ் அணிக்காக ஐபிஎல் தொடரில் 1000 ரன்களைப் பூர்த்தி செய்தார். இதன்மூலம் பஞ்சாப் கிங்ஸ் அணிக்காக சர்வதேச கிரிக்கெட்டில் அறிமுகமகாத வீரர் ஒருவர் 1000 ரன்களை காடந்துள்ளது இதுவே முதல்முறையாகும். 

மேற்கொண்டு மனன் வோராவின் சாதனையையும் முறியடித்துள்ளார். முன்னதாக பஞ்சாப் கிங்ஸ் அணிக்காக 2013 முதல் 2017ஆம் ஆண்டுவரை விளையாடிய மனன் வோரா 957 ரன்களைக் குவித்திருந்ததே சாதனையாக இருந்த நிலையில், தற்போது பிரப்ஷிம்ரன் சிங் புதிய சாதனை படைத்துள்ளார். மேற்கொண்டு இந்த பட்டியலில் ஷஷாங்க் சிங் 512 ரன்களுடன் மூன்றாம் இடத்திலும், பால் வால்தாட்டி 499 ரன்களுடன் 4ஆம் இடத்திலும், ஷாரூக் கான் 426 ரன்களுடன் ஐந்தாம் இடத்திலும் உள்ளனர். 

Also Read: LIVE Cricket Score

பஞ்சாப் கிங்ஸுக்காக அதிக ரன்கள் (சர்வதேச அறிமுகமில்லாத வீரர்கள்)

  • பிரப்சிம்ரன் சிங் - 1000* ரன்கள் (43 போட்டிகள்)
  • மனன் வோஹ்ரா- 957 ரன்கள் (45 போட்டிகள்)
  • ஷஷாங்க் சிங் - 512 ரன்கள் (23 போட்டிகள்)
  • பால் வால்தாட்டி - 499 ரன்கள் (21 போட்டிகள்)
  • ஷாருக் கான் - 426 ரன்கள்  (33 போட்டிகள்)
TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள் ::

அதிகம் பார்க்கப்பட்டவை