எஸ்ஏ20: எம்ஐ கேப்டவுனை வீழ்த்தி பிரிட்டோரியா கேப்பிட்டல்ஸ் த்ரில் வெற்றி!

Updated: Sun, Feb 05 2023 10:42 IST
Pretoria Capitals win the last ball thriller by 1 wicket and confirm their qualification for the sem (Image Source: Google)

தென் ஆப்பிரிக்க டி20 லீக் தொடர் 26ஆவது லீக் போட்டியில் எம்ஐ கேப்டவுன், பிரிடோரியா கேப்பிட்டல்ஸ் ஆகிய அணிகள் மோதின.இப்போட்டியில் டாஸ் வென்ற பிரிட்டோரியா கேப்பிட்டல்ஸ் அணி முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்தது.

முதலில் களமிறங்கிய எம்ஐ கேப் டவுன் அணியில், தொடக்க வீரர் வேண்டர் டூசென் 51 (29) ரன்களை குவித்து அசத்தினார். இருப்பினும், மற்றவர்களில் யாருமே 20+ ரன்களை அடிக்கவில்லை. விஸ்லி மார்ஷல் 16 (13) அடித்த நிலையில், அடுத்து டெவால்ட் பிரீவிஸ் 14 (11), லின்டே 14 (18), கேப்டன் ரஷித் கான் 14 (9) ஆகியோர் தலா 14 ரன்களை அடித்தார்கள். 

இறுதியில், எம்ஐ கேப்டவுன் அணி 19.4 ஓவர்கள் முடிவில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 159 ஆல் அவுட்டானது. பிரிட்டோரியா கேப்பிட்டல்ஸ் அணி தரப்பில் ஈதன் போஷ்க், ஆண்ட்ரிச் நோர்ட்ஜே, ஜிம்மி நீஷம் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றினர். 

அதன்பின் இலக்கை துரத்திக் களமிறங்கிய பிரிடோரியா கேப்பிட்டல்ஸ் அணியில் தொடக்க வீரர்கள் குஷல் மெண்டிஸ் 39 (25), ரிலே ரூசோவ் 40 (19) ஆகியோர் அபாரமாக விளையாடி அசத்தினார்கள். இருப்பினும், பிலிப் சால்ட் 9 (9), ஜேம்ஸ் நீஷம் 0 (2) போன்றவர்கள் பெரிய ஸ்கோர் அடிக்காமல் ஆட்டமிழந்ததால், பிரிடோரியா அணி திடீர் பின்னடைவை சந்தித்தது.

இறுதியில் கடைசி 3 ஓவர்களில் 22 ரன்கள் அடிக்க வேண்டும் என்ற நிலை இருந்தது. அப்போது டெய்ல் என்டர்ஸ் ஷனுரான் முத்துச்சாமி, நோர்ட்ஜே ஆகியோர் மட்டும்தான் களத்தில் இருந்தார்கள். நோர்ட்ஜே இரண்டு பவுண்டரி அடித்து ஆட்டமிழந்த பிறகு, முத்துச்சாமி அதிரடியாக விளையாட ஆரம்பித்தார்.

இறுதியில், கடைசி ஓவரின் 3ஆவது பந்தில், சாம் கரன் வேகத்தில் முத்துச்சாமி 25 (23) ஆட்டமிழந்தார். இவர் 2 பவுண்டரி, 2 சிக்ஸர் அடித்திருந்தார். அடுத்து, கடைசி விக்கெட் களமிறங்கியது. கடைசி 3 பந்தில் 2 ரன்கள் தேவைப்பட்ட நிலையில், ஜோஷுவா லிட்டில் கடைசி பந்தில் இரண்டு ரன்களை சேர்த்து அசத்தினார்.

இதன்மூலம், பிரிட்டோரியா கேப்பிட்டல்ஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 160 ரன்களை சேர்த்து, ஒரு விக்கெட் வித்தியாசத்தில் வெற்றியைப் எம் ஐ கேப்டவுனை வீழ்த்தி த்ரில் வெற்றியைப் பதிவுசெய்தது.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை