பாகிஸ்தான் சூப்பர் லீக் டி20 தொடரில் நேற்று நடைபெற்ற 9ஆவது லீக் ஆட்டத்தில் பெஷ்வர் ஸால்மி - லாகூர் கலந்தர்ஸ் அணிகள் மோதின.
Advertisement
இப்போட்டியில் முதலில் பேட்டிங் செய்த லாகூர் கலந்தர்ஸ் அணி ஃபகர் ஸமானின் அதிரடியான ஆட்டத்தால் 20 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட்டுகளை இழந்து 199 ரன்களைச் சேர்த்தது.
Advertisement
அதன்பின் 200 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற கடின இலக்குடன் களமிறங்கிய பெஷ்வர் அணியில் காம்ரன் அக்மல், ஹைதர் அலி ஆகியோரைத் தவிர மற்ற வீரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர்.
இதனால் 20 ஓவர்கள் முடிவில் அந்த அணி 9 விக்கெட்டுகளை இழந்து 170 ரன்களை மட்டுமே சேர்த்தது. கலந்தர்ஸ் அணி தரப்பில் ஸமான் கான் 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார்.
இதன்மூலம் லாகூர் கலந்தர்ஸ் அணி 29 ரன்கள் வித்தியாசத்தில் பெஷ்வர் ஸால்மி அணியை வீழ்த்தி வெற்றிபெற்றது.