PSL 2023: கப்தில் அதிரடியில் குயிட்டா கிளாடியேட்டர்ஸ் த்ரில் வெற்றி!

Updated: Tue, Mar 07 2023 10:29 IST
Image Source: Google

பாகிஸ்தனைன் உள்ளூர் டி20 கிரிக்கெட் தொடரான பாகிஸ்தான் சூப்பர் லீக் தொடரின் 8ஆவது சீசன் விறுவிறுப்பான கட்டத்தை எட்டியுள்ளது. இதில் நேற்று நடைபெற்ற 22ஆவது லீக் ஆட்டத்தில் குயிட்டா கிளாடியேட்டர்ஸ் - கராச்சி கிங்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இதில் டாஸ் வென்ற குயிட்டா கிளாடியேட்டர்ஸ் முதலில் பந்துவீச தீர்மானித்தது. 

அதன்படி களமிறங்கிய கராச்சி கிங்ஸ் அணியில் மேத்யூ வேட் முதல் பந்திலேயே ஆட்டமிழந்து அதிர்ச்சியளித்தார். அவரைத் தொடர்ந்து களமிறங்கிய டயூப் தாஹிர் 7 ரன்களிலும், காசிம் அக்ரம் 8 ரன்களிலும், ஷோயப் மாலில் 13 ரன்களிலும் என அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து பெவிலியனுக்கு நடையைக் கட்டினர். 

இருப்பினும் மற்றொரு தொடக்க வீரர் ஆடம் ரோஸிங்டன் அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி டஹ்னது அரைசதத்தைப் பதிவுசெய்து அசத்தினார். அவருடன் ஜோடி சேர்ந்த கேப்டன் இமாத் வாசிமும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த அணியின் ஸ்கோரும் உயர்ந்தது. பின் 45 பந்துகளில் 10 பவுண்டரி, ஒரு சிக்சர் என 69 ரன்களைச் சேர்த்த ரோஸிங்டன் விக்கெட்டை இழந்தார். 

இறுதியில் இமாத் வாசிம் 30 ரன்களையும், அமெர் யாமின் 23 ரன்களையும் சேர்த்து பங்களிப்பு செய்ய கராச்சி கிங்ஸ் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 6 விக்கெட்டுகளை இழந்து 164 ரன்களைச் சேர்த்தது. குயிட்டா அணி தரப்பில் நசீம் ஷா, ஐமல் கான் தலா 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றினர். 

இதையடுத்து இலக்கை நோக்கி களமிறங்கிய குயிட்டா கிளாடியேட்டர்ஸ் அணியில் ஒமைர் யூசுஃப் 8 ரன்களிலும், முகமது நவாஸ் 15 ரன்களிலும், இஃப்திகார் அகமது 4 ரன்களிலும், நஜிபுல்லா ஸத்ரான் ஒரு ரன்னிலும், உமர் அக்மல் 9 ரன்களிலும் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து தடுமாறினர். 

பின்னர் ஜோடி சேர்ந்த மார்ட்டின் கப்தில் - கேப்டன் சர்ஃப்ராஸ் அகமது இணை பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி விக்கெட்டை இழப்பை தடுத்தனர். ஒருகட்டத்திற்கு அதிரடியாக விளையாடிய மார்ட்டின் கப்தில் அரைசதம் கடந்துடன் அணியின் வெற்றிக்கு வழி வகைசெய்தார். இதற்கிடையில் நிதான ஆட்டத்தை வெளிப்படுத்திய சர்ஃப்ராஸ் கான் 29 ரன்களில் எதிர்பாராத விதமாக விக்கெட்டை இழந்தார். 

இருப்பினும் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த மார்ட்டின் கப்தில் 56 பந்துகளில் 9 பவுண்டரி, 4 சிக்சர்கள் என 86 ரன்களைச் சேர்த்து அணிக்கு வெற்றியைத் தேடிக்கொடுத்தார். இதன்மூலம் 19.5 ஓவர்களில் குயிட்டா கிளாடியேட்டர்ஸ் அணி இலக்கை எட்டி 4 விக்கெட் வித்தியாசத்தில் த்ரில் வெற்றியைப் பதிவுசெய்து அசத்தியது. 

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை