ஒன்பாவது சீசன் பாகிஸ்தான் சூப்பர் லீக் தொடர் விறுவிறுப்பான கட்டத்தை எட்டியுள்ளது. இதில் நேற்று நடைபெற்ற 13ஆவது லீக் ஆட்டத்தில் இஸ்லாமாபாத் யுனைடெட் அணியை எதிர்த்து பெஷாவர் ஸால்மி அணி பலப்பரீட்சை நடத்தியது. கடாஃபி கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்ற இஸ்லாமாபாத் யுனைடெட் அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது. 

Advertisement

இதையடுத்து இன்னிங்ஸைத் தொடங்கிய பெஷாவர் ஸால்மி அணிக்கு கேப்டன் பாபர் ஆசாம் - சைம் அயூப் ஆகியோர் தொடக்கம் கொடுத்தனர். இருவரும் ஆரம்பத்தில் இருந்தே அதிரடியாக விளையாடி ஸ்கோரை உயர்த்தியதுடன், அணிக்கு தேவையான அடித்தளத்தையும் அமைத்துக்கொடுத்தனர். இருவரும் இணைந்து முதல் விக்கெட்டிற்கு 77 ரன்கள் சேர்த்த நிலையில் அரைசதம் அடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட சைம் அயூப் 38 ரன்களில் ஆட்டமிழந்தார். 

Advertisement

இதையடுத்து களமிறங்கிய முகமது ஹாரிஸ், ஹசீபுல்லா கான் ரன்கள் ஏதுமின்றியும் விக்கெட்டுகளை இழந்து ஏமாற்றமளித்தனர். அதேசமயம் மறுபக்கம் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய பாபர் ஆசாம் அரைசதத்தை கடந்து விளையாடினார். ஆனால் மறுபக்கம் களமிறங்கிய பால் வால்டர் 19 ரன்களிலும், அதிரடி ஆல் ரவுண்டர் ரோவ்மன் பாவெல் 8 ரன்களுக்கும் என ஆட்டமிழந்தனர். 

ஆனால் மறுபக்கம் தொடர்ந்து அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த கேப்டன் பாபர் அசாம் 59 பந்துகளில் சதமடித்து அசத்தியதுடன் இறுதிவரை ஆட்டமிழக்காமல் 14 பவுண்டரி, 2 சிக்சர்கள் என 111 ரன்களையும், ஆசிஃப் அலி 17 ரன்களையும் சேர்த்து ஃபினீஷிங்கை கொடுத்தனர். இதன்மூல பெஷாவர் ஸால்மி அணி 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 201 ரன்களை குவித்துள்ளது. இஸ்லாமாபாத் அணி தரப்பில் கேப்டன் ஷதாப் கான் 2 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்.

இதையடுத்து இலக்கை நோக்கி விளையாடிய இஸ்லாமாத் யுனைடெட் அணியில் ஜோர்டன் காக்ஸ் 13, ஷதாப் கான் 6 ரன்களுக்கும், அகா சல்மான் 14 ரன்களுக்கும் என விக்கெட்டுகளை இழந்து பெவிலியன் திரும்பினர். அதன்பின் ஜோடி சேர்ந்த காலின் முன்ரோ - ஆசாம் கான் இணை அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் ஸ்கோரை மளமளவென உயர்த்தினர். 

தொடர்ந்து அதிரடியாக விளையாடிய இருவரும் அரைசதம் கடந்ததுடன், இருவரும் இணைந்து 100 ரன்களுக்கு மேல் பார்ட்னர்ஷிப்பும் அமைத்து அசத்தினர். இதனால் இஸ்லாமாபாத் அணி எளிதில் வெற்றிபெறும் என்ற எதிர்பார்ப்பு இருந்தது. ஆனால் ஆட்டத்தின் 19ஆவது ஓவரை வீசிய ஆரிஃப் யாகூப் தனது ஒரே ஓவரில் ஒட்டுமொத்த இஸ்லாமாபாத் அணியின் வெற்றி வாய்ப்புக்கு முற்றுப்புள்ளி வைத்தார். 

Advertisement

அதன்படி 6 பவுண்டரி, 6 சிக்சர்கள் என 70 ரன்கள் எடுத்திருந்த நிலைல் அசாம் கான் விக்கெட்டை இழக்க, அவரைத்தொடர்ந்து 71 ரன்கள் எடுத்திருந்த காலின் முன்ரோவும் தனது விக்கெட்டை இழந்தனார். அதன்பின் களமிறங்கிய ஹைதர் அலி, ஃபஹீம் அஷ்ரஃப், ஹுனைன் ஷா என அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தனர். இதனால் அந்த அணி 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட்டுகளை இழந்து 193 ரன்களை மட்டுமே எடுத்தது.

பெஷாவர் ஸால்மி அணி தரப்பில் அபாரமாக பந்துவீசிய ஆரிஃப் யாகூப் 5 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினர். இதன்மூலம் பெஷாவர் ஸால்மி அணி 8 ரன்கள் வித்தியாசத்தில் இஸ்லாமாபாத் யுனைடெட் அணியை வீழ்த்தி த்ரில் வெற்றியைப் பதிவுசெய்து அசத்தியது. மேலும் இப்போட்டியில் சதமடித்து அசத்திய பெஷாவர் ஸால்மி அணி கேப்டன் பாபர் ஆசாம் ஆட்டநாயகன் விருதை வென்றார்.

About the Author

Bharathi Kannan
Bharathi Kannan - He is very interested in cricket. Participated in Domestic level cricket matches. He has experience working in sports news in various media. He has the experience of providing news from different angles non-stop in all types of cricket series like IPL, World Cup. He is also very interested in sports news including cricket, tennis, football and kabaddi. பாரதி கண்ணன் - கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு ஊடகங்களிலும் விளையாட்டு செய்திகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட் என அனைத்து வடிவிலான கிரிக்கெட் தொடர்களின் போதும் இடைவிடாது பல்வேறு கோணங்களில் செய்திகளை அளித்த அனுபவம் உண்டு. கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், கால்பந்து, கபடி உள்ளிட்ட இதர விளையாட்டு செய்திகளிலும் அதீத ஆர்வமுள்ளவர். Read More
Latest Cricket News