பாகிஸ்தான் சூப்பர் லீக் தொடரின் 9ஆவது சீசன் இறுதிக்கட்டத்தை நெருங்கியுள்ளது. இதில் புள்ளிப்பட்டியலில் முதலிரண்டு இடங்களைப் பிடித்துள்ள முல்தான் சுல்தான்ஸ் மற்றும் பெஷாவர் ஸால்மி அணிகளுக்கு இடையேயான முதலாவது குவாலிஃபையர் சுற்று ஆட்டம் நேற்று நடைபெற்றது. கராச்சியிலுள்ள தேசிய கிரிக்கெட் அகாடமியில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்ற பெஷாவர் ஸால்மி அணி முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது. 

Advertisement

அதன்படி களமிறங்கிய பெஷாவர் அணிக்கு கேப்டன் பாபர் ஆசாம் - சைம் அயூப் இணை தொடக்கம் கொடுத்தனர். இதில் சைம் அயூப் ஒரு ரன்னில் ஆட்டமிழந்து ஏமாற்றமளித்தர். அதன்பின் பாபர் ஆசாமுடன் இணைந்த முகமது ஹாரிஸ் அதிரடியாக விளையாட அணியின் ஸ்கோரும் மளமளவென உயர்ந்தது. அதன்பின் 22 ரன்களில் முகமது ஹாரிஸ் தனது விக்கெட்டை இழக்க, அடுத்து களமிறங்கிய ஹசீபுல்லா கானும் 3 ரன்களுடன் விக்கெட்டை இழந்தார். 

Advertisement

பின்னர் நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த கேப்டன் பாபர் ஆசாம் அரைசதம் அடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் 42 ரன்களுக்கு விக்கெட்டை இழந்து அரைசதம் அடிக்கும் வாய்ப்பை தவறவிட்டார். அவர்களைத் தொடர்ந்து களமிறங்கிய டாம் கொஹ்லர் கட்மோர் 24 ரன்களுக்கும், ரோவ்மன் பாவெல் 12 ரன்களுக்கும், அமர் ஜமால் ஒரு ரன்னிலும் என அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தனர்.

இறுதியில் அதிரடியாக விளையாடிய பால் வால்டர், லூக் வுட் ஆகியோர் தலா 14 ரன்களைச் சேர்த்து அணிக்கு ஃபினீஷிங்கைக் கொடுத்தனர். இதன்மூலம் 20 ஓவர்கள் முடிவில் பெஷாவர் ஸால்மி அணி 7 விக்கெட்டுகளை இழந்து 147 ரன்களை மட்டுமே சேர்த்தது. முல்தான் சுல்தான்ஸ் அணி தரப்பில் கிறிஸ் ஜோர்டன், உசாமா மிர் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளனர். 

இதையடுத்து இலக்கை நோக்கி விளையாடிய முல்தான் சுல்தான்ஸ் யசிர் கான் - கேப்டன் முகமது ரிஸ்வான் இணை தொடக்கம் கொடுத்தனர். இதில் முகமது ரிஸ்வான் 15 ரன்கள் மட்டுமே எடுத்த நிலையில் விக்கெட்டை இழந்தார். அதன்பின் யசிர் கானுடன் இணைந்த உஸ்மான் கான் இணை அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் ஸ்கோரை மளமளவென உயர்த்தினர். 

இதில் அபார ஆட்டத்தை வெளிப்படுத்திய யசிர் கான் அரைசதம் கடந்து அசத்தினர். அதன்பின் 7 பவுண்டரி, ஒரு சிக்சர் என 54 ரன்கள் எடுத்த நிலைஇல் யசிர் கான் தனது விக்கெட்டை இழக்க, அடுத்து களமிறங்கிய ஜான்சன் சார்லஸும் 11 ரன்களுக்கு விக்கெட்டை இழந்தார். பின்னர் களமிறங்கிய இஃப்திகார் அஹ்மத் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். 

Advertisement

இப்போட்டியில் இறுதிவரை ஆட்டமிழக்கமால் இருந்த உஸ்மான் கான் 36 ரன்களையும், இஃப்திகார் அஹ்மத் 22 ரன்களையும் சேர்த்து அணிக்கு வெற்றியைத் தேடிக்கொடுத்தனர். இதன்மூலம் முல்தான் சுல்தான்ஸ் அணி 18.3 ஓவர்களில் இலக்கை எட்டியதுடன் 7 விக்கெட் வித்தியாசத்தில் பெஷாவர் ஸால்மி அணியை வீழ்த்தி வெற்றிபெற்றது. இந்த வெற்றியின் மூலம் முல்தான் சுலதான்ஸ் அணி பிஎஸ்எல் தொடரின் இறுதிப்போட்டிக்கு முன்னேறி அசத்தியுள்ளது.

About the Author

Bharathi Kannan
Bharathi Kannan - He is very interested in cricket. Participated in Domestic level cricket matches. He has experience working in sports news in various media. He has the experience of providing news from different angles non-stop in all types of cricket series like IPL, World Cup. He is also very interested in sports news including cricket, tennis, football and kabaddi. பாரதி கண்ணன் - கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு ஊடகங்களிலும் விளையாட்டு செய்திகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட் என அனைத்து வடிவிலான கிரிக்கெட் தொடர்களின் போதும் இடைவிடாது பல்வேறு கோணங்களில் செய்திகளை அளித்த அனுபவம் உண்டு. கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், கால்பந்து, கபடி உள்ளிட்ட இதர விளையாட்டு செய்திகளிலும் அதீத ஆர்வமுள்ளவர். Read More
Latest Cricket News