பாகிஸ்தான் சூப்பர் லீக் தொடரின் 9ஆவது சீசன் விறுவிறுப்பான கட்டத்தை எட்டியுள்ளத். இதில் இன்று நடைபெற்று வரும் 10ஆவது லீக் ஆட்டத்தில் லாகூர் கலந்தர்ஸ் மற்றும் கராச்சி கிங்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தி வருகின்றன. கடாஃபி கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்று வரும் இப்போட்டியில் டாஸ் வென்றுள்ல கராச்சி கிங்ஸ் அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்து விளையாடியது. 

Advertisement

அதன்படி களமிறங்கிய லாகூர் கலந்தர்ஸ் அணிக்கு ஃபகர் ஸமான் - சாஹிப்சாதா ஃபர்ஹான் இணை தொடக்கம் கொடுத்தனர். இதில் ஃபகர் ஸமான் 6 ரன்களில் நடையைக் கட்ட, அடுத்து களமிறங்கிய ரஸ்ஸி வேண்டர் டுசெனும் 23 ரன்களுக்கு விக்கெட்டை இழந்தார். அதன்பின் பின் களமிறங்கிய அஹ்சன் பாட்டி 8 ரன்களுக்கும்,  ஜஹந்தத் கான் 12 ரன்களுக்கும் என நடையைக் கட்டினார். 

Advertisement

பின்னர் ஐந்தாவது விக்கெட்டிற்கு களமிறங்கிய ஷாய் ஹோப் அதிரடியாக விளையாடிய நிலையில், 2 பவுண்டரி, ஒரு சிக்சர் என 23 ரன்களில் விக்கெட்டை இழக்க, அடுத்து வந்த சிக்கந்தர் ரஸாவும் முதல் பந்திலேயே ஆட்டமிழந்து அதிர்ச்சி கொடுத்தார். இதற்கிடையில் மறுமுனையில் நங்கூரம் போல் நின்று விளையாடி வந்த சாஹிப்சாதா ஃபர்ஹான் தனது அரைசதத்தைப் பதிவுசெய்ததுடன், அணியின் ஸ்கோரையும் உயர்த்தினார்.

அதன்பின் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த ஃபர்ஹான் 4 பவுண்டரி, 4 சிக்சர்கள் என 72 ரன்களையும், அவருக்கு துணையாக விளையாடிய ஜார்ஜ் லிண்டே 3 பவுண்டரி, ஒரு சிக்சர் என 26 ரன்களையும் சேர்த்தார். இதன்மூலம் 20 ஓவர்கள் முடிவில் லாகூர் கலந்தர்ஸ் அணி 6 விக்கெட் இழப்பிற்கு 175 ரன்களைச் சேர்த்தது. கராச்சி கிங்ஸ் அணி தரப்பில் ஹசன் அலி, தப்ரைஸ் ஷம்ஸி மற்றும் மிர் ஹம்ஸா ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை கைப்பற்றினர்.

About the Author

Bharathi Kannan
Bharathi Kannan - He is very interested in cricket. Participated in Domestic level cricket matches. He has experience working in sports news in various media. He has the experience of providing news from different angles non-stop in all types of cricket series like IPL, World Cup. He is also very interested in sports news including cricket, tennis, football and kabaddi. பாரதி கண்ணன் - கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு ஊடகங்களிலும் விளையாட்டு செய்திகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட் என அனைத்து வடிவிலான கிரிக்கெட் தொடர்களின் போதும் இடைவிடாது பல்வேறு கோணங்களில் செய்திகளை அளித்த அனுபவம் உண்டு. கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், கால்பந்து, கபடி உள்ளிட்ட இதர விளையாட்டு செய்திகளிலும் அதீத ஆர்வமுள்ளவர். Read More
Latest Cricket News