சதமடித்து சாதனைகளை குவித்த குயின்டன் டி காக்!

Updated: Thu, Oct 12 2023 20:54 IST
Image Source: Google

உலகக் கோப்பையின் இன்றையப் போட்டியில் தென்னாப்பிரிக்கா - ஆஸ்திரேலியா அணிகள் விளையாடி வருகின்றன. இப்போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது. அதன்படி களமிறங்கிய தென் ஆப்பிரிக்க அணிக்கு குயின்டன் டி காக், ஐடன் மார்க்ரம், ஹென்ரிச் கிளாசென், டெம்பா பவுமா ஆகியோர் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினர்.  

இதன்மூலம் தென் ஆப்பிரிக்க அணி 7 விக்கெட்டுகளை இழந்து 311 ரன்கள் குவித்துள்ளது. அந்த அணியில் அதிகபட்சமாக குயிண்டன் டி-காக் 106 பந்துகளில் 109 ரன்கள் குவித்தார். இலங்கைக்கு எதிரான முதல் போட்டியில் சதம்விளாசிய டி-காக், தொடர்ச்சியாக தனது இரண்டாவது சதத்தை இன்று பதிவு செய்துள்ளார். அவரது இன்றைய சதத்தின் மூலம் டி-காக்  சில சாதனைகளைப் படைத்துள்ளார்.

அதன்படி, உலகக் கோப்பையில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக சதமடித்த மூன்றாவது தென்ஆபிரிக்க வீரர் என்ற சாதனையை டி-காக் படைத்துள்ளார். முன்னதாக, 1999 ஆம் ஆண்டு கிப்ஸும் , 2019 ஆம் ஆண்டு ஃபாஃப் டூ பிளெசியும் இந்த சாதனையைப் படைத்துள்ளனர்.

உலகக் கோப்பையில் அதிக சதமடித்த தென்னாப்பிரிக்க வீரர்கள்

  • ஏபி டி வில்லியர்ஸ் - 4 சதங்கள் 
  • ஹாசிம் ஆம்லா - 2 சதங்கள்
  • டு பிளெசிஸ் - 2 சதங்கள்
  • கிப்ஸ் - 2 சதங்கள்
  • குயின்டன் டி காக் - 2 சதங்கள் 

தொடக்க ஆட்டக்காரராக களமிறங்கி அதிக சதங்கள் அடித்த தென்னாப்பிரிக்க வீரர்கள்

  • ஹாசிம் ஆம்லா - 27 சதங்கள் 
  • குயின்டன் டி காக் - 19 சதங்கள்
  • கிப்ஸ் - 18 சதங்கள்
  • கேரி கிறிஸ்டன் - 13 சதங்கள்
  • கிரெம் ஸ்மித் - 10 சதங்கள்

ஆஸ்திரேலியாவுக்கு எதிராக அதிக சதங்கள் அடித்த தென் ஆப்பிரிக்க வீரர்கள்

  • டு பிளெசிஸ் - 5 சதங்கள்
  • கிப்ஸ் - 3  சதங்கள்
  • குயின்டன் டி காக் - 3 சதங்கள்

உலகக் கோப்பையில் அதிக சதங்கள் அடித்த விக்கெட் கீப்பர்கள்

  • குமார் சங்ககாரா - 5 சதங்கள்
  • ஏபி டி வில்லியர்ஸ் - 2 சதங்கள்
  • பிரண்டன் டெய்லர் - 2 சதங்கள்
  • குயின்டன் டி காக் - 2 சதங்கள்
TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள் ::

அதிகம் பார்க்கப்பட்டவை