அபாரமான கேட்ச்சின் மூலம் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்த ரஹ்மனுல்லா குர்பாஸ் - காணொளி!

Updated: Thu, Oct 03 2024 10:13 IST
Image Source: Google

12ஆவது சீசன் கரீபியன் பிரிமியர் லீக் டி20 தொடர் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இதில் இன்று நடைபெற்ற முதல் குவாலிஃபையர் ஆட்டத்தில் லீக் சுற்றின் முடிவில் புள்ளிப்பட்டியலின் முதலிரண்டு இடங்கஃ கயானா அமேசன் வாரியர்ஸ் மற்றும் செயின்ட் லூசியா கிங்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின.

கயானாவில் உள்ள புரோவிடன்ஸ் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்ற செயின்ட் லூசியா கிங்ஸ் அணியானது முதலில் பேட்டிங்  செய்தவாக அறிவித்து கயானா அணியை பந்துவீச அழைத்தது. அதன்படி களமிறங்கிய லூசியா கிங்ஸ் அணிக்கு ஜான்சன் சார்லஸ் மற்றும் கேப்டன் ஃபாஃப் டூ பிளெசிஸ் இணை அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தியதுடன் தங்கள் அரைசதங்களையும் பதிவுசெய்து 124 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தும் அசத்தினர். 

இதன்மூலம் செயின்ட் லூசியா கிங்ஸ் அணியானது 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட்டுகளை இழந்து 198 ரன்களைக் குவித்தது. இதில் அதிகபட்சமாக ஜான்சன் சார்லஸ் 79 ரன்களையும், கேப்டன் ஃபாஃப் டூ பிளெசிஸ் 57 ரன்களையும் சேர்த்தனர். கயானா அணி தரப்பில் டுவைன் பிரிட்டோரியஸ் மற்றும் மொயீன் அலி ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தினர். அதன்பின் கடின இலக்கை நோக்கி களமிறங்கிய கயானா அணிக்கு எதிர்பார்த்த தொடக்கம் கிடைக்கவில்லை. 

ஒருபக்கம் விக்கெட்டுகள் வீழ்ந்தாலும் மறுமுனையில் அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த ஷிம்ரான் ஹெட்மையர் 4 சிக்ஸர்களை விளாசி 37 ரன்களைச் சேர்த்திருந்தார். இதன்மூலம் கயானா அணி 13 ஓவர்களில் 4 விக்கெட் இழப்பிற்கு 106 ரன்களை சேர்த்திருந்த தருணத்தில் மழை குறுக்கிட்டதால் ஆட்டம் பாதிக்கப்பட்டது. அதன்பின் மழை தொடர்ந்து நீடித்த காரணத்தால் இப்போட்டியின் வெற்றியாளரைத் தீர்மானிக்க டக்வொர்த் லூயிஸ் முறை கடைபிடிக்கப்பட்டது.

அதன்படி இப்போட்டியில் செயின்ட் லூசியா கிங்ஸ் அணியானது 15 ரன்கள் வித்தியாசத்தில் கயானா அமேசன் வரியர்ஸ் அணியை ஈழ்த்தி வெற்றிபெற்றதாக அறிவிக்கப்பட்டது. இந்த வெற்றியின் மூலம் செயின்ட் லூசியா கிங்ஸ் அணி நடப்பு சிபிஎல் தொடரில் முதல் அணியாக இறுதிப்போட்டிக்கு முன்னேறி அசத்தியுள்ளது. மேலும் இப்போட்டியில் அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்திய ஜான்சன் சார்லஸ் ஆட்டநாயகன் விருதை வென்றார்.

 

இந்நிலையில் இப்போட்டியில் கயானா அணி தோல்வியைத் தழுவினாலும், அந்த அணி வீரர் ரஹ்மனுல்லா குர்பாஸ் பிடித்த அபாரமான கேட்ச் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. அதன்படி ஷமார் ஜோசப் வீசிய இன்னிங்ஸின் 15ஆவது ஓவரின் கடைசி பந்தில் லூசியா கிங்ஸ் அணி கேப்டன் ஃபாஃப் டூ பிளெசிஸ் சிக்ஸர் அடிக்க முயற்சித்து, லாங் ஆன் திசையை நோக்கி தூக்கி அடித்தார். ஆனால் பந்தில் அவர் எதிர்பார்த்த வேகம் இல்லதாக காரணத்தால் அவரால் முழுமையாக ஷாட்டை விளையாட முடியவில்லை. 

Also Read: Funding To Save Test Cricket

இதனால் பந்து மைதானத்திற்கு குள்ளேயே விழு இருந்த சூழலில், அத்திசையில் ஃபீல்டிங் செய்துகொண்டிருந்த ரஹ்மனுல்லா குர்பாஸ் ஓடி வந்து டைவ் அடித்ததுடன் அபாரமான கேட்ச்சையும் பிடித்து அசத்தினார். இதனால் 57 ரன்கள் எடுத்திருந்த நிலையில் ஃபாஃப் டூ பிளெசிஸ் தனது விக்கெட்டை இழந்து பெவிலியன் திரும்பினார். இந்நிலையில் ரஹ்மனுல்லா குர்பாஸ் பிடித்த இந்த அபாரமான கேட்ச் குறித்த காணொளி இணையத்தில் வைரலாகி வருகிறது. 

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை