இந்திய அணியின் பயிற்சியாளராக ராகுல் டிராவிட் நியமனம் - பிசிசிஐ!

Updated: Wed, Nov 03 2021 21:30 IST
Image Source: Google

இந்திய கிரிக்கெட் அணியின் தலைமைப் பயிற்சியாளராக தற்போது ரவி சாஸ்திரி இருந்துவருகிறார். அவருடைய பதவிக் காலம், இந்த டி20 உலகக் கோப்பைத் தொடருடன் முடிவடைகிறது. அதனால், தலைமைப் பயிற்சியாளர் உள்ளிட்ட பதவிகளுக்கு பி.சி.சி.ஐ விண்ணப்பங்களைக் கோரியிருந்தது. 

இந்தநிலையில், ராகுல் டிராவிட்டை இந்திய அணியின் தலைமைப் பயிற்சியாளராக நியமனம் செய்துள்ளதக பிசிசிஐ இன்று அறிவித்துள்ளது.

இதுகுறித்து பிசிசிஐ தலைவர் சவுரவ் கங்குலி கூறுகையில்‘இந்திய கிரிக்கெட் அணியின் தலைமைப் பயிற்சியாளராக பதவியேற்கும் ராகுல் டிராவிட்டை வரவேற்கிறோம். அவர் கிரிக்கெட் போட்டிகளில் மிகச்சிறப்பான ஆட்டங்களை வெளிப்படுத்தியிருக்கிறார். தேசிய கிரிக்கெட் அகாதமியின் தலைவராக ராகுல் டிராவிட் சேவை செய்துள்ளார். அதன்மூலம், இளம் வீரர்களை இந்திய அணிக்காக தயார் செய்துள்ளார். அவருடைய புதிய பயணம் இந்திய அணி புதிய உயரத்துக்கு அழைத்துச் செல்லும் என்று நம்புகிறோம்’ என்று தெரிவித்துள்ளார்.

Also Read: T20 World Cup 2021

இதுகுறித்து பேசிய ராகுல் டிராவிட், ‘இந்திய அணியின் தலைமைப் பயிற்சியாளராக நியமிக்கப்பட்டுள்ளது எனக்கு உண்மையில் பெருமைக்குரியது. நான் இந்தப் பணியை எதிர்நோக்கி காத்திருக்கிறேன். ரவி சாஸ்திரியின் தலைமையில் இந்திய அணி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியுள்ளது. அந்த அணியை முன்னோக்கி அழைத்துச் செல்லவிரும்புகிறேன்’ என்று தெரிவித்துள்ளார்.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை