IND vs NZ: மைதான ஊழியர்களுக்கு அன்பளிப்பு வழங்கிய டிராவிட்!

Updated: Mon, Nov 29 2021 20:39 IST
Rahul Dravid Gives Rs 35,000 To Groundsmen For Preparing Sporting Pitch: Report
Image Source: Google

இந்தியா - நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டி கான்பூர் மைதானத்தில் கடந்த 25ஆம் தேதி தொடங்கியது. இப்போட்டியின் இறுதி நாளான இன்று இரு அணிக்கும் வெற்றி தோல்வியின்றி டிராவில் முடிவடைந்தது.

இந்நிலையில் இந்த போட்டி முடிந்த பிறகு கான்பூர் கிரீன் பார்க் மைதானத்தின் மைதான ஊழியர்களுக்கு இந்திய அணியின் தலைமை பயிற்சியாளராக ராகுல் டிராவிட் 35000 ரூபாய் கொடுத்து உள்ளார் என்ற தகவல் வெளியாகியுள்ளது. 

அவர் எதற்கு அந்த பணத்தை கொடுத்தார் என்றால், போட்டி இறுதி நாள்வரை சுவாரசியம் குறையாமல் நடைபெறும்படி மைதானத்தை தயார் படுத்தியது மட்டுமின்றி ஒவ்வொரு நாள் ஆட்டத்திற்கு பின்பும் அதை சரியான முறையில் மைதான ஊழியர்கள் பராமரித்ததன் காரணமாகவும் அவர்களின் பணியை பாராட்டி டிராவிட் அந்த தொகையை வழங்கியுள்ளார்.

டிராவிட் செய்த இந்த செயலை ஒரு பாராட்டாக நினைத்து இனி எப்போது இங்கு டெஸ்ட் போட்டி நடைபெற்றாலும் தரமான மைதானத்தை கொடுப்போம் என்று அம்மாநில கிரிக்கெட் சங்கம் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள் ::

அதிகம் பார்க்கப்பட்டவை