இந்திய அணியின் பயிற்சியாளராக ராகுல் டிராவிட் நியமனம் - கொண்டாடும் ரசிகர்கள்!

Updated: Thu, May 20 2021 16:17 IST
Rahul Dravid to coach Indian team on Lanka tour (Image Source: Google)

விராட் கோலி தலைமையிலான இந்திய அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து,  ஜூன் 18 முதல் 22 ஆம் தேதி வரை  உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியிலும், அப்படியே இங்கிலாந்துக்கு எதிராக 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரிலும் விளையாடுகிறது.

இதற்கிடையில் இந்திய அணி இலங்கைக்கு சுற்றுப்பயணம் செய்து 3 ஒருநாள் மற்றும் 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாட உள்ளது. ஆனால் இத்தொடரின் போது இந்திய அணியின் நட்சத்திர வீரர்கள் அனைவரும் இங்கிலாந்தில் இருப்பார்கள் என்பதால், இலங்கை தொடருக்கு புதிய அணியை பிசிசிஐ அனுப்பவுள்ளது. 

அதன்படி இலங்கை சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இந்திய அணியில், ஷிகர் தவான், ஷ்ரேயாஸ் ஐயர், புவனேஷ்வர் குமார், ஹர்திக் பாண்டியா ஆகியோருடன் சூர்யகுமார் யாதவ், இஷான் கிஷான், பிரித்வி ஷா உள்ளிட்ட வீரர்களை கொண்ட அணி இலங்கையை எதிர்கொள்ளும் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளன. 

கேப்டன் விராட் கோலி, துணை கேப்டன் ரோஹித் சர்மா, தலைமை பயிற்சியாளர் ரவி சாஸ்திரி ஆகியோர் இங்கிலாந்தில் இருப்பார்கள் என்பதால், இலங்கை சுற்றுப்பயணத்திற்கான இந்திய அணியின் பயிற்சியாளராக, முன்னாள் இந்திய கேப்டனும், தற்போதை தேசிய கிரிக்கெட் அகாடமியின் தலைவராக இருக்கும் ராகுல் டிராவிட்டை பயிற்சியாளராக நியமிக்க பிசிசிஐ திட்டமிட்டிருப்பதாக தகவல் வெளியான.

இந்நிலையில், இலங்கை சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இந்திய அணியின் பயிற்சியாளராக ராகுல் டிராவிட் நியமிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. 

ராகுல் டிராவிட் இதற்கு முன்னதாக இந்திய அண்டர் 19 மற்றும் இந்தியா ஏ அணிகளின் தலைமை பயிற்சியாளராக செயல்பட்டுள்ளார். எனவே அந்த வீரர்கள் நிறைந்த இலங்கை சுற்றுப்பயணத்திற்கான இந்திய அணியை ராகுல் டிராவிட் பயிற்சியாளராக இருந்து வழிநடத்துவது இந்திய அணிக்கு கூடுதல் பலமாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை