ஐபிஎல் 2021: ராஜஸ்தான் ராயல்ஸ் vs மும்பை இந்தியன்ஸ் -போட்டி முன்னோட்டம் & ஃபேண்டஸி லெவன்!
ஐபிஎல் தொடரின் 14ஆவது சீசன் தற்போது இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இதில் நாளை நடைபெறும் 51ஆவது லீக் ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் - மும்பை இந்தியன்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.
இரு அணிகளும் இப்போட்டியில் வென்றால் மட்டுமே பிளே ஆஃப் பயணத்தில் நீடிக்க முடியும் என்பதால் இப்போட்டியின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளது.
போட்டி தகவல்கள்
- மோதும் அணிகள் -ராஜஸ்தான் ராயல்ஸ் vs மும்பை இந்தியன்ஸ்
- இடம் - ஷார்ஜா கிரிக்கெட் மைதானம்
- நேரம் - இரவு 7.30 மணி
போட்டி முன்னோட்டம்
ரோஹித் சர்மா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணி நடப்பு சீசன் பிளே ஆஃப் வாய்ப்பை பெறும் முனைப்புடன் நாளைய போட்டியை எதிர்கொள்ளவுள்ளது.
ஆனாலும் அந்த அணியின் பேட்டிங் தொடர்ந்து நிலையில்லாமல் இருப்பது அணிக்கு சற்று பின்னடைவை ஏற்படுத்தி வருகிறது. இருப்பினும் அணியின் பந்துவீச்சு தொடர்ந்து சிறப்பாக அமைந்துள்ளதால், அது அணியின் வெற்றிக்கு வழிவகுக்கும் என்று கருதப்படுகிறது.
சஞ்சு சாம்சன் தலைமையிலான ராஜஸ்தான் ராயல்ஸ் அணி, சிஎஸ்கே அணிக்கெதிராக இமாலய இலக்கை துரத்தி வெற்றிபெற்ற மகிழ்ச்சியுடன் நாளைய போட்டியில் விளையாடுகிறது.
அதிலும் யஷஸ்வி ஜெய்ஸ்வால், ஷிவம் தூபே ஆகியோரது ஆட்டம் அணிக்கு கூடுதல் நம்பிக்கையை அளித்துள்ளது. இதனால் நிச்சயம் அந்த அணி நாளைய போட்டியிலும் வெல்லும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும் இரு அணிகளுமே நாளைய போட்டியில் வெற்றிபெற்றால் மட்டுமே பிளே ஆஃப் வாய்ப்பை தக்கவைக்க முடியும் என்பதால் இப்போட்டியின் மீதான எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளன.
நேருக்கு நேர்
- மோதிய போட்டிகள் - 25
- மும்பை வெற்றி - 13
- ராஜஸ்தான் வெற்றி - 12
உத்தேச அணி
ராஜஸ்தான் ராயல்ஸ் - எவின் லூயிஸ், யஷஸ்வி ஜெய்ஸ்வால், சஞ்சு சாம்சன் (கே), சிவம் துபே,கிளென் பிலிப்ஸ், டேவிட் மில்லர், ராகுல் திவேத்தியா, ஆகாஷ் சிங், மயங்க் மார்கண்டே, சேத்தன் சகரியா, முஸ்தாபிசூர் ரஹ்மான்
மும்பை இந்தியன்ஸ் - ரோகித் சர்மா (கே), குயின்டன் டி காக் (wk), சூர்யகுமார் யாதவ், சவுரப் திவாரி, ஹர்திக் பாண்டியா, கீரான் பொல்லார்ட், குர்னால் பாண்டியா, நாதன் கூல்டர் -நைல், ஜெயந்த் யாதவ், ஜஸ்பிரித் பும்ரா, ட்ரெண்ட் போல்ட்.
Also Read: இந்திய அணியின் இங்கிலாந்து சுற்றுப்பயணம், 2021
பேண்டஸி லெவன்
- விக்கெட் கீப்பர்கள் - சஞ்சு சாம்சன்
- பேட்டர்ஸ் - யஷாஸ்வி ஜெய்ஸ்வால், எவின் லூயிஸ், ஹர்திக் பாண்டியா, ரோஹித் சர்மா, சூர்யகுமார் யாதவ்
- ஆல் -ரவுண்டர்கள் - சிவம் துபே, கீரான் பொல்லார்ட்
- பந்துவீச்சாளர்கள் - முஸ்தாபிசூர் ரஹ்மான், மயங்க் மார்கண்டே, ஜஸ்பிரித் பும்ரா