SL vs AUS, 2nd Test: இலங்கை டெஸ்ட் அணியில் ரமேஷ் மெண்டிஸ் சேர்ப்பு!
ஆஸ்திரேலிய அணி இலங்கையில் சுற்றுப்பயணம் செய்து இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில், இரண்டு போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரிலும் விளையாட இருக்கிறது. இதில் இரு அணிகளுக்கும் இடையேயான முதல் டெஸ்ட் போட்டியானது கலேவில் நடைபெற்று முடிந்த நிலையில், ஆஸ்திரேலிய அணி இன்னிங்ஸ் மற்றும் 242 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியுள்ளது.
இதையடுத்து இலங்கை மற்றும் ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையேயான இரண்டாவது மற்று கடைசி டெஸ்ட் போட்டி நாளை (பிப்.06) கலே கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளது. இதில் ஏற்கெனவே ஆஸ்திரேலிய அணி முதல் போட்டியை வென்றுள்ள நிலையில் இப்போட்டியையும் வென்று தொடரை கைப்பற்றும் முயற்சியில் இறங்கியுள்ளது. அதேசமயம் இலங்கை அணி இப்போட்டியில் வெற்றிபெற்று தொடரை சமன்செய்ய முயற்சிக்கவுள்ளது.
இந்நிலையில் இப்போட்டிக்கான இலங்கை அணியை அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் இன்று அறிவித்துள்ளது. அதன்படி, இப்போட்டிக்கான இலங்கை அணியில் அனுபவ வீரர்கள் ரமேஷ் மெண்டிஸ் மற்றும் காயத்திலிருந்து மீண்டுள்ள பதும் நிஷாங்கா ஆகியோர் சேர்க்கப்பட்டுள்ளனர். அதேசமயம் விஷ்வா ஃபெர்னாண்டோ மற்றும் லஹிரு உதாரா ஆகியோர் டெஸ்ட் அணியில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளனர்.
முன்னதாக கடந்த நவம்பர் மாதம் நியூசிலாந்திற்கு எதிரான மோசமான ஃபார்ம் காரணமாக ரமேஷ் மெண்டிஸ் இலங்கை டெஸ்ட் அணியில் இருந்து நீக்கப்பட்டிருந்தர். அதன்பின் அவர் இலங்கையின் உள்ளூர் போட்டிகளில் சிறப்பாக செயல்பட்டதை அடுத்து மீண்டும் தற்போது அணியில் சேர்க்கப்பட்டுள்ளார். அதேசமயம் காயம் காரணமாக முதல் போட்டியில் விளையாடமால் இருந்த பதும் நிஷங்கா இப்போட்டியில் விளையாடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
Also Read: Funding To Save Test Cricket
இலங்கை டெஸ்ட் அணி: தனஞ்சய டி சில்வா (கேப்டன்), திமுத் கருணாரத்ன, பாதும் நிஷங்க, ஓஷத பெர்னாண்டோ, தினேஷ் சண்டிமல், ஏஞ்சலோ மேத்யூஸ், கமிந்து மெண்டிஸ், குசால் மெண்டிஸ், சதீர சமரவிக்ரம, சோனல் தினுஷா, பிரபாத் ஜெயசூரியா, ஜெஃப்ரி வான்டர்சே, நிஷான் பீரிஸ், அசிதா பெர்னாண்டோ, ரமேஷ் மெண்டிஸ், லஹிரு குமார, மிலன் ரத்நாயக்க.