ஆசிய கோப்பை தொடர் பாகிஸ்தானின் நடைபெறவில்லை என்றால் இது நடக்கும் - ரமீஸ் ராஜா எச்சரிக்கை!

Updated: Sat, Dec 03 2022 13:05 IST
Image Source: Google

கிரிக்கெட்டின் பரம எதிரிகளான இந்தியாவும் பாகிஸ்தானும் கடந்த 10 வருடங்களாக எல்லை பிரச்சினை காரணமாக இருதரப்பு தொடர்களில் மோதுவதை தவிர்த்து ஆசிய மற்றும் உலக கோப்பைகளில் மட்டும் மோதி வருகின்றன. அந்த வகையில் இந்த வருடம் ஆசிய கோப்பையில் 2 முறை சந்தித்த இவ்விரு அணிகளும் கடைசியாக ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற டி20 உலக கோப்பை மோதின. 

அதில் விராட் கோலியின் அபாரமான ஆட்டத்தால் இந்தியா அசாத்தியமான வெற்றியை பதிவு செய்த நிலையில் அடுத்ததாக இவ்விரு அணிகளும் 2023இல் ஆசிய மற்றும் உலகக்கோப்பையில் மோதுவது உள்ளது என்றாலும் அது சாத்தியமாகுமா என்பது கேள்விக்குறியாகியுள்ளது.

ஏனெனில் வரலாற்றின் 16ஆவது ஆசியக் கோப்பையை தங்களது நாட்டில் நடத்தும் உரிமையை கடந்த சில மாதங்களுக்கு முன்பாக புதிய தலைவராக பொறுப்பேற்ற ஜெய் ஷா தலைமையில் நிகழ்ந்த ஆசிய கவுன்சில் கூட்டத்தில் பாகிஸ்தான் வாங்கியது. ஆனால் எல்லை பிரச்சினை காரணமாக ஆசிய கோப்பையில் பங்கேற்க பாகிஸ்தானுக்கு இந்தியா பயணிக்காது என்று கடந்த மாதம் பிசிசிஐ செயலாளராகவும் இருக்கும் ஜெய் ஷா அறிவித்தார். 

இருப்பினும் தங்களிடம் கலந்தாலோசிக்காமல் அவர் இப்படி பேசியது ஏமாற்றத்தை கொடுப்பதாக தெரிவித்த பாகிஸ்தான் வாரியம் தங்களது நாட்டுக்கு வரவில்லை என்றால் அதே 2023இல் இந்தியாவில் நடைபெறும் ஐசிசி 50 ஓவர் உலகக் கோப்பை பங்கேற்க நாங்களும் வர மாட்டோம் என்று தெரிவித்தது.

இந்நிலையில், இங்கிலாந்து - பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டியின் போது ரமிஸ் ராஜா “ஆசிய கோப்பை தொடரை நடத்தும் உரிமையை நாங்கள் நியாயமான முறையில் பெற்றோம். இந்த தொடர் பாகிஸ்தானில் நடைபெறவில்லை என்றால் எங்கள் அணி தொடரை விட்டு வெளியேற வாய்ப்புகள் அதிகம் உள்ளது” என தெரிவித்துள்ளார்.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை