கிரிக்கெட்டில் ரீ எண்ட்ரி கொடுக்கும் கேரளா எக்ஸ்பிரஸ்

Updated: Mon, Dec 27 2021 12:16 IST
Image Source: Google

ஒருகாலத்தில் இந்திய அணியின் வேகப்பந்துவீச்சாளர்களில் தவிர்க முடியா வீரராக இருந்தவர் கேரளா எக்ஸ்பிரஸ் என்றழைக்கப்படும் ஸ்ரீசாந்த்.

பந்துவீச்சில் மட்டும் அல்ல களத்திலும் அனலாக தெறிக்க கூடியவர். விக்கெட்டுகளை வீழ்த்திவிட்டு அவர் செய்யும் சேட்டைக்கே ரசிகர்கள் அதிகம்

இந்திய அணிக்காக 27 டெஸ்ட்களில் விளையாடி 87 விக்கெட்டுகளையும், 53 ஒருநாள் போட்டிகளில் விளையாடி 75 விக்கெட்டுகளை ஸ்ரீசாந்த் வீழ்த்தியுள்ளார். 2007ஆம் ஆண்டு டி20 உலகக் கோப்பை இறுதி போட்டியில் அவர் பிடித்த கேட்ச்சால் தான் இந்திய அணி உலகக் கோப்பையை வென்றது. 2011ஆம் ஆண்டு உலகக் கோப்பை இறுதிப் போட்டியிலும் இந்திய அணியில் இடம்பெற்று இருந்தார் ஸ்ரீசாந்த்.

ஸ்ரீசாந்தின் கிரிக்கெட் வாழ்க்கை உச்சத்தில் சென்று கொண்டிருந்த நிலையில் ஐபிஎல் ஸ்பாட் பிக்சிங் புகாரில் சிக்கி தனது கிரிக்கெட் வாழ்க்கைய இழந்தார். அவருக்கு விதிக்கப்பட்ட வாழ்நாள் தடையை எதிர்த்து உச்ச நீதிமன்றம் வரை வழக்கு தொடுத்தார். அப்போது ஸ்ரீசாந்த் மீதான குற்றம் நிரூபிக்கப்படவில்லை என்பதால், அவரது வாழ்நாள் தடையை நீக்க உத்தரவிட்டது.

இதனையடுத்து ஸ்ரீசாந்த்துக்கு விதிக்கப்பட்ட தடை 7 ஆண்டுகளாக குறைக்கப்பட்டது. ஸ்ரீசாந்தின் தடைக்காலம் நடப்பாண்டின் செப்டம்பர் மாதம் முடிவுக்கு வந்தது. இதனையடுத்து ஸ்ரீசாந்த் கேரள அணிக்காக ஒரு போட்டியில் சையது முஷ்டாக் அலி தொடரில் விளையாடினார். தொடர்ந்து தமது பந்தவீச்சில் கவனம் செலுத்தி வந்த 38 வயதான ஸ்ரீசாந்த், கேரள ரஞ்சி அணியின் உத்தேச பட்டியலில் இடம்பிடித்துள்ளார்.

இந்த செய்தியை ஜெர்சி படத்தின் காட்சி மூலம் பதிவிட்ட ஸ்ரீசாந்த், சிறந்த கிறிஸ்துமஸ் பரிசாக உணர்கிறேன். 9 ஆண்டுகளக்கு பிறகு ரஞ்சி கோப்பையில் விளையாட வாய்ப்பு கிடைத்துள்ளது, எனக்காக தொடர்ந்து பிரார்த்தனை செய்யுங்கள் என்று கூறினார். ஸ்ரீசாந்த் ரஞ்சி அணிக்கு திரும்பி சிறப்பாக செயல்பட்டால், அவர் இந்திய அணிக்கும் திரும்ப வாய்ப்பு உள்ளது குறிப்பிடத்தக்கது.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை