இந்தியாவின் பாரம்பரிய மிக்க உள்ளூர் கிரிக்கெட் தொடரான ரஞ்சி கோப்பை தொடரின் 2024-25ஆவது சீசன் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இதன் இரண்டாவது அரையிறுதி போட்டியில் விதர்பா மற்றும் மும்பை அணிகள் பலப்பரீட்சை நடத்தின. நாக்பூரில் உள்ள விதர்பா கிரிக்கெட் சங்க மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்ற விதர்ப அணி முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது. 

Advertisement

அதன்படி களமிறங்கிய விதர்பா அணியில் துருவ் ஷோரே 74 ரன்களையும், டேனிஷ் மாலேவார் 79 ரன்களையும், யாஷ் ரத்தோட் 54 ரன்களையும் சேர்த்து அசத்தினர். மேற்கொண்டு மற்ற வீரர்களும் ஓரளவு ரன்களைச் சேர்த்ததன் மூலம் அந்த அணி முதல் இன்னிங்ஸில் 383 ரன்களைக் குவித்து ஆல் அவுட்டானது. மும்பை அணி தரப்பில் ஷிவம் தூபே 5 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தினார். அதன்பின் முதல் இன்னிங்ஸைத் தொடங்கிய மும்பை அணியில் ஆயுஷ் மத்ரே 9 ரன்களில் விக்கெட்டை இழந்தார். பின்னர் ஜோடி சேர்ந்த ஆகாஷ் ஆனந்த் - சித்தேஷ் லத் இணை பொறுப்புடன் விளையாடி அணியின் ஸ்கோரை உயர்த்தினர்.

Advertisement

இதில் ஆகாஷ் ஆனந்த் தனது அரைசதத்தைப் பதிவுசெய்து அசத்தினார். அதேசமயம் மறுபக்கம் அரைசதம் அடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட சித்தேஷ் லத் 35 ரன்கள் எடுத்திருந்த நிலையில் ஆட்டமிழந்து அரைசதம் அடிக்கும் வாய்ப்பை தவறவிட்டார்.அதன்பின் களமிறங்கிய கேப்டன் அஜிங்கியா ரஹானே 18 ரன்களிலும், சூர்யகுமார் யாதவ் ரன்கள் ஏதுமின்றிம், ஷிவம் தூபே ரன்கள் ஏதுமின்றியும் என பார்த் ரேகாடே ஓவரில் அடுத்தடுத்து ஆட்டமிழக்க, அடுத்து களமிறங்கிய ஷம்ஸ் முலானி 4 ரன்களிலும், அதிரடியாக விளையாடிய ஷர்துல் தாக்கூர் 4 பவுண்டரி, ஒரு சிக்ஸர் அன 37 ரன்களில் என விக்கெட்டை இழந்தனர்.

இதனால் இரண்டாம் நாள் ஆட்டநேர முடிவில் மும்பை அணி 7 விக்கெட் இழப்பிற்கு 188 ரன்களை மட்டுமே எடுத்தது. இந்நிலையில் இன்று தொடங்கிய நான்காம் நாள் ஆட்டத்தை ஆகாஷ் ஆனந்த் 67 ரன்களுடனும், தனுஷ் கோட்டியான் 5 ரன்களுடனும் தொடர்ந்தனர். இதில் ஆகாஷ் ஆனந்த் சதமடித்து அசத்திய நிலையில் 106 ரன்களைச் சேர்த்து ஆட்டமிழந்தார். அதேசமயம் தனுஷ் கோட்டியானும் 33 ரன்களில் விக்கெட்டை இழந்தார். இதனால் மும்பை அணி முதல் இன்னிங்ஸில் 270 ரன்களைச் சேர்த்து ஆல் அவுட்டானது. விதர்பா தரப்பில் பரத் ரேகாடே 4 விக்கெட்டுகளை கைப்பற்றினார். 

அதன்பின் 113 ரன்கள் முன்னிலையுடன் இரண்டாவது இன்னிங்ஸைத் தொடர்ந்த விதர்பா அணியில் அதர்வா டைடே ரன்கள் ஏதுமின்றியும், துருவ் ஷோரே 13, கருண் நாயர் 6, டேனிஷ் மாலேவார் 29 என அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தனர். பின்னர் ஜோடி சேர்ந்த யாஷ் ரத்தோட் - அக்ஸர் வத்கர் இணை அணியின் ஸ்கோரை உயர்த்தி வருகின்றனர். இதன்மூலம் விதர்பா அணி மூன்றாம் நாள் ஆட்டநேர முடிவில் 4 விக்கெட் இழப்பிற்கு 147 ரன்களைச் சேர்த்துள்ளது. இதில் யாஷ் ரத்தோட் 59 ரன்களுடனும், அக்ஸய் வத்கர் 31 ரன்களுடனும் களத்தில் உள்ளனர். 

Advertisement

About the Author

Bharathi Kannan
Bharathi Kannan - He is very interested in cricket. Participated in Domestic level cricket matches. He has experience working in sports news in various media. He has the experience of providing news from different angles non-stop in all types of cricket series like IPL, World Cup. He is also very interested in sports news including cricket, tennis, football and kabaddi. பாரதி கண்ணன் - கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு ஊடகங்களிலும் விளையாட்டு செய்திகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட் என அனைத்து வடிவிலான கிரிக்கெட் தொடர்களின் போதும் இடைவிடாது பல்வேறு கோணங்களில் செய்திகளை அளித்த அனுபவம் உண்டு. கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், கால்பந்து, கபடி உள்ளிட்ட இதர விளையாட்டு செய்திகளிலும் அதீத ஆர்வமுள்ளவர். Read More
Latest Cricket News