ரஞ்சி தொடர் இறுதிகட்டத்தை நெருங்குகிறது. சௌராஷ்டிரா, கர்நாடகா, ஆந்திரா மற்றும் மத்திய பிரதேசம் ஆகிய 4 அணிகளும் அரையிறுதிக்கு முன்னேறின. கர்நாடகா - சௌராஷ்டிரா அணிகளும், ஆந்திரா - மத்திய பிரதேசம் அணிகளும் அரையிறுதியில் விளையாடிவருகின்றன.

Advertisement

கர்நாடகா - சௌராஷ்டிரா அணிகளுக்கு இடையேயான அரையிறுதி போட்டி பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் நடந்துவருகிறது. இந்த போட்டியில் டாஸ் வென்ற சௌராஷ்டிரா அணி ஃபீல்டிங்கை தேர்வு செய்தது. அதன்படி, முதலில் பேட்டிங் ஆடிய கர்நாடகா அணியின் தொடக்க வீரரும் கேப்டனுமான மயன்க் அகர்வால் ஒருமுனையில்  நிலைத்து நின்று அபாரமாக பேட்டிங் ஆட, மறுமுனையில் சமர்த் (3), தேவ்தத் படிக்கல்(9), நிகின் ஜோஸ்(13), மனீஷ் பாண்டே(7), ஷ்ரேயாஸ் கோபால்(15) ஆகியோர் சொற்ப ரன்களுக்கு மறுமுனையில் ஆட்டமிழந்தனர். 

Advertisement

பின்னர் 6ஆவது விக்கெட்டுக்கு மயன்க் அகர்வாலுடன் ஜோடி சேர்ந்த ஸ்ரீநிவாஸ் ஷரத் சிறப்பாக ஆடி அரைசதம் அடித்தார். ஷரத் 66 ரன்கள் அடித்தார். அபாரமாக பேட்டிங் ஆடிய மயன்க் அகர்வால் இரட்டை சதமடித்தார். 429 பந்துகளை எதிர்கொண்டு 28 பவுண்டரிகள் மற்றும் 6 சிக்ஸர்களுடன் 249 ரன்களை குவித்த மயன்க் அகர்வால் கடைசி விக்கெட்டாக ஆட்டமிழந்தார். மயன்க் அகர்வாலின் அபாரமான இரட்டை சதத்தால் முதல் இன்னிங்ஸில் 407 ரன்களை குவித்தது கர்நாடகா அணி. 

இதையடுத்து முதல் இன்னிங்ஸை விளையாடிவரும் சௌராஷ்டிரா அணியின் தொடக்க வீரர் ஸ்னெல் படேல் ரன்னே அடிக்காமல் டக் அவுட்டானார். மற்றொரு தொடக்க வீரரான ஹர்விக் தேசாய் 33 ரன்கள் அடித்தார். 3ஆம் வரிசையில் இறங்கிய விஷ்வராஜ் ஜடேஜா 22 ரன்கள் மட்டுமே அடித்தார். அதன்பின்னர் 4 மற்றும் 5ஆம் வரிசைகளில் இறங்கிய ஷெல்டான் ஜாக்சன் மற்றும் அர்பிட் வசவாடா ஆகிய இருவரும் இணைந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் ஸ்கோரை உயர்த்தினர். 

தொடர்ந்து அபாரமாக பேட்டிங் செய்த இருவருமே சதமடித்து, 4ஆவது விக்கெட்டுக்கு 232 ரன்களை குவித்தனர். அபாரமாக ஆடி 160 ரன்களை குவித்த ஷெல்டான் ஜாக்சன் இரட்டை சதமடிக்காமல் ஆட்டமிழந்தார். இதனால் 3ஆம் நாள் ஆட்ட முடிவில் சௌராஷ்டிரா அணி 4 விக்கெட் இழப்பிற்கு 364 ரன்களை குவித்துள்ளது. இதில் வசவாடா 112 ரன்களுடனும், சிராக் ஜானி 19 ரன்களுடனும் களத்தில் உள்ளனர். 

About the Author

Bharathi Kannan
Bharathi Kannan - He is very interested in cricket. Participated in Domestic level cricket matches. He has experience working in sports news in various media. He has the experience of providing news from different angles non-stop in all types of cricket series like IPL, World Cup. He is also very interested in sports news including cricket, tennis, football and kabaddi. பாரதி கண்ணன் - கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு ஊடகங்களிலும் விளையாட்டு செய்திகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட் என அனைத்து வடிவிலான கிரிக்கெட் தொடர்களின் போதும் இடைவிடாது பல்வேறு கோணங்களில் செய்திகளை அளித்த அனுபவம் உண்டு. கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், கால்பந்து, கபடி உள்ளிட்ட இதர விளையாட்டு செய்திகளிலும் அதீத ஆர்வமுள்ளவர். Read More
Latest Cricket News