மும்பை ரஞ்சியில் அணியில் இணைந்த சூர்யகுமார் யாதவ், ஷிவம் தூபே!

Updated: Mon, Feb 03 2025 20:35 IST
Image Source: Google

ரஞ்சி கோப்பை கிரிக்கெட் தொடரின் 2024-25ஆம் ஆண்டிற்கான சீசன் இறுதிக்கட்டதை எட்டியுள்ளது. இதில் லீக் சுற்று போட்டிகள் முடிவடைந்துள்ள நிலையில் இத்தொடரின் காலிறுதி சுற்றுக்கு தமிழ்நாடு, மும்பை, கேரளா, ஹரியானா, குஜராத், சௌராஷ்டிரா, விதர்பா, ஜம்மு காஷ்மீர் உள்ளிட்ட அணிகள் முன்னேறிவுள்ளன. இதில் அஜிங்கியா ரஹானே தலைமையிலான மும்பை அணி காலிறுதிப்போட்டியில் ஹரியானா அணியை எதிர்கொள்கிறது. 

இந்நிலையில் இப்போட்டிக்கு முன்னதாக மும்பை ரஞ்சி அணியில் சூர்யகுமார் யாதவ் மற்றும் ஷிவம் தூபே ஆகியோர் சேர்க்கப்பட்டுள்ளார். சமீபத்தில் நடந்து முடிந்த இங்கிலாந்து அணிக்கு எதிரான டி20 தொடரில் சூர்யகுமார் யாதவ் மற்றும் ஷிவம் தூபே இருவரும் விளையாடினர். இதில் சூர்யகுமார் யாதர் அடுத்தடுத்த போட்டிகளில் ரன்களை சேர்க்க தவறிய நிலையில், ஷிவம் தூபே அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தி அசத்தியுள்ளார். 

இந்நிலையில் அவர்கள் இருவரும் மும்பை ரஞ்சி அணியில் இணைந்திருப்பது அந்த அணிக்கு கூடுதல் உத்வேகமளிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதேசமயம் கடந்த சுற்று ஆட்டத்தில் மும்பை அணிக்காக விளையாடிய ரோஹித் சர்மா, ஸ்ரேயாஸ் ஐயர் மற்றும் யஷஸ்வி ஜெய்ஸ்வால் ஆகியோர் இங்கிலாந்து அணிக்கு எதிரான ஒருநாள் தொடரில் விளையாடவுள்ள நிலையில், அவர்களது இடத்தை சூர்யகுமார் யாதவ், ஷிவம் தூபே நிரப்புவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

மேற்கொண்டு இவர்கள் இருவரும் ரஞ்சி கோப்பை தொடரின் ஆரம்ப கட்ட போட்டிகளில் விளையாடிய நிலையில், அதன்பின் நடைபெற்ற சையத் முஷ்டாக் அலி கோப்பை தொடர் மற்றும் விஜய் ஹசாரே கோப்பை தொடருக்கான மும்பை அணியிலும் இணைந்து விளையாடியதுடன் குறிப்பிடத்தகுந்த தாக்கத்தை ஏற்படுத்தினர். இதனால் இந்த காலிறுதிச்சுற்று போட்டிகளிலும் அவர்கள் மும்பை அணிக்கு பங்களிப்பை வழங்குவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. 

Also Read: Funding To Save Test Cricket

மும்பை ரஞ்சி அணி: அஜிங்க்யா ரஹானே (கேப்டன்), ஆயுஷ் மத்ரே, அங்கிரிஷ் ரகுவன்ஷி, அமோக் பட்கல், சூர்யகுமார் யாதவ், சித்தேஷ் லாட், ஷிவம் துபே, ஆகாஷ் ஆனந்த், ஹார்திக் தோமர், சூர்யான்ஷ் ஷேட்ஜ், ஷர்துல் தாக்கூர், ஷம்ஸ் முலானி, தனுஷ் கோட்டியன், மோஹித் அவஸ்தி, சில்வெஸ்டர் டி'சோசா, ராய்ஸ்டன் டயஸ், அதர்வா அங்கோலேகர், ஹர்ஷ் தன்னா.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள் ::

அதிகம் பார்க்கப்பட்டவை