Mum vs har
ரஞ்சி கோப்பை 2025: ஹரியானாவை வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறியது மும்பை!
ரஞ்சி கோப்பை கிரிக்கெட் தொடரின் காலிறுதிச்சுற்று ஆட்டம் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இதில் கொல்கத்தாவில் உள்ள ஈடன் கார்டன்ஸ் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்று வரும் மூன்றாவது காலிறுதி ஆட்டத்தில் ஹரியானா மற்றும் மும்பை அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இப்போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த மும்பை அணி ஷம்ஸ் முலானி, தனூஷ் கோட்டியான் ஆகியோரின் அபார ஆட்டத்தால் 315 ரன்களைச் சேர்த்தது.
இதில் அதிகபட்சமாக தனூஷ் கோட்டியான் 97 ரன்களையும், ஷம்ஸ் முலானி 91 ரன்களையும் சேர்த்தனர். அதன்பின் முதல் இன்னிங்ஸைத் தொடங்கிய ஹரியானா அணிக்கு கேப்டன் அங்கித் குமார் சதமடித்து அசத்தியதுடன் 136 ரன்களைக் குவித்தார். அவரைத்தவிர்த்து மற்ற வீரர்கள் பெரிதளவில் ரன்களைச் சேர்க்க தவறியதன் காரணமாக அந்த அணி முதல் இன்னிங்ஸில் 301 ர்னகளை மட்டுமே எடுத்து ஆல் அவுட்டானது.
Related Cricket News on Mum vs har
-
சதமடித்து ஃபார்மை நிரூபித்த ரஹானே; இந்திய அணியில் மீண்டும் வாய்ப்பு கிடைக்குமா?
ஹரியானா அணிக்கு எதிரான ரஞ்சி கோப்பை காலிறுதி ஆட்டத்தில் மும்பை அணி கேப்டன் அஜிங்கியா ரஹானே சதமடித்து அசத்தியுள்ளார். ...
-
ரஞ்சி கோப்பை 2025: க்ளீன் போல்டான சூர்யகுமார் யாதவ் - வைரலாகும் காணொளி!
ஹரியானா அணிக்கு எதிரான ரஞ்சி கோப்பை காலிறுதி ஆட்டத்தில் மும்பை அணியின் நட்சத்திர வீரர் சூர்யகுமார் யாதவ் க்ளீன் போல்டாகிய காணொளி வைரலாகி வருகிறது. ...
-
மும்பை ரஞ்சியில் அணியில் இணைந்த சூர்யகுமார் யாதவ், ஷிவம் தூபே!
ஹரியானா அணிக்கு எதிரான ரஞ்சி கோப்பை காலிறுதி போட்டியில் விளையாடும் மும்பை அணியில் சூர்யகுமார் யாதவ், ஷிவம் தூபே சேர்க்கப்பட்டுள்ளனர். ...
Cricket Special Today
-
- 18 Mar 2024 07:47
-
- 16 Mar 2024 07:24