ஐபிஎல் 2022: நிறைவு நிகழ்ச்சியால் நொகிழ்ச்சியடைந்த ரசிகர்கள்!

Updated: Sun, May 29 2022 20:16 IST
Ranveer singh in IPL Closing ceremony (Image Source: Google)

ஐபிஎல் தொடரின் இறுதிப்போட்டியில் இன்று குஜராத் மற்றும் ராஜஸ்தான் அணிகள் மோதுகின்றன. அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் இந்த இறுதிப்போட்டிக்காக நிறைவு விழா ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

இந்தியாவின் பிரபலமான ஐபிஎல் தொடர் 15 ஆண்டுகளை தொட்டுள்ளதை கொண்டாடும் வகையிலும், இந்தியாவின் 75 ஆண்டுகால கிரிக்கெட் வரலாற்றை போற்றும் வகையிலும் இந்த நிறைவு விழா ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. வாண வேடிக்கைகளுடன் கோலாகலமாக இந்த விழா தொடங்கியது.

இந்த நிகழ்ச்சியை காண, இந்திய வரலாற்றில் இதுவரை இல்லாத வகையில் சுமார் 1, 32,000 பார்வையாளர்கள் பங்கேற்றிருந்தனர். மத்திய அமைச்சர்கள், இந்திய கிரிக்கெட்டில் அனைத்து கேப்டன்களுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டு வந்திருந்தனர். எனவே இதற்காக இந்தியாவின் அனைத்து மாநிலங்களையும் போற்றும் வகையில் நடன கலைஞர்கள் வரவழைக்கப்பட்டனர்.

இந்நிலையில் முதல் கலைநிகழ்ச்சியின் தொடக்கமே கண்ணீருடன் தொடங்கியது. பாலிவுட் நடிகர் ரன்வீர் சிங் முதல் நபராக நடன நிகழ்ச்சியை நடத்தினார். எண்ட்ரியில் ஐபிஎல் கொடியை ஏந்தி வந்த ரன்வீர் சிங், பெரும் கூட்டத்தை வழிநடத்தி, மைதானத்தை பெரும் கூச்சலுடன் ஒரு ரவுண்ட் அடித்தார்.

அப்போது 83 திரைப்படத்தில் கபில் தேவ் தலைமையில் இந்திய அணி உலகக்கோப்பை வென்றதற்காக போடப்பட்ட பாடல் பின்னணியில் இசைக்கப்பட்டது. தேசியக்கொடியுடன் அதனை கேட்ட இந்திய ரசிகர்கள் அனைவரும் இந்தியாவின் 75 ஆண்டுகால கிரிக்கெட்டை நினைத்து கண்ணீர் பொங்க நெகிழ்ச்சியைந்தனர்.

சிலர் ஐசிசி கோப்பைகளை வென்றுக்கொடுத்த கபில் தேவ், எம்.எஸ்.தோனி உள்ளிட்ட பல கேப்டன்களுக்கும் ரசிகர்கள் நன்றி கூறினர். இதுகுறித்த காணொளி இணையத்தில் வேகமாக பரவி வருகிறது. இந்த நிறைவு விழாவில் ஏ.ஆர்.ரஹ்மானும் இசை நிகழ்ச்சி நடத்தினார் என்பது குறிப்பிடத்தக்கது.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை