விஜய் சங்கர் உலகக்கோப்பை தொடரில் இடம்பிடித்தது எப்படி? - ரவி சாஸ்திரி பதில்!
கொல்கத்தா மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகள் மோதிய லீக் போட்டி பல்வேறு பரபரப்புகள் மற்றும் திருப்புங்கள் நிறைந்ததாக இருந்தது. இப்போட்டியில் குஜராத் அணியும் முதலில் பேட்டிங் செய்தது. 150+ ரன்களுக்கு 4 விக்கெட்டுகளை இழந்து தடுமாறி வந்தபோது 180 ரன்கள் அடிப்பதே கடினம் என்ற நிலைக்கு தள்ளப்பட்டது.
கடைசி இரண்டு ஓவர்களில், 19வது ஓவரில் 25 ரன்கள், 20வது ஓவரில் 20 ரன்கள் என 45 ரன்கள் அடித்து குஜராத் அணி 20 ஓவர்கள் முடிவில் 204 ரன்கள் அடித்தது. இதற்கு முழு முக்கிய காரணம் இந்த இரண்டு ஓவர்களிலும் 5 சிக்ஸர்கள் இரண்டு பவுண்டரிகள் அடித்தது விஜய் சங்கர் தான். 24 பந்துகளில் கடைசி வரை ஆட்டமிழக்காமல் 63 ரன்கள் விளாசினார். இப்போது விஜய் சங்கர் 2019 ஆம் ஆண்டு உலக கோப்பையில் எடுக்கப்பட்டது பற்றி பேச்சுக்கள் அடிபட்டு வருகின்றன. இதற்கு தனது கருத்தை தெரிவித்திருக்கிறார் இந்திய அணியின் அப்போதைய தலைமை பயிற்சியாளர் ரவி சாஸ்திரி.
இதுகுறித்து பேசிய அவர், “விஜய் சங்கர் 2019 ஆம் ஆண்டு உலகக் கோப்பையில் எடுத்ததற்கு காரணம் அவரிடம் இருக்கும் மிகச்சிறந்த திறமைகள். அதன் பிறகு காயம் காரணமாக பாதியிலேயே விலகினார். இது மிகவும் வருத்தத்திற்குரியது. அறுவை சிகிச்சையும் செய்து கொண்டு மீண்டும் கடினமாக உழைத்து இருக்கிறார். அதன் பலனாகவே இப்போது நல்ல ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார்.
இவர் விளையாடியதை நான் பார்த்திருக்கிறேன். நேர்த்தியாக ஆடக்கூடியவர் நான்காவது வீரராகவும் இறங்கி நிதானமாக அடிப்பார். ஏழாவது எட்டாவது இடத்திலும் இறங்கி அதிரடியாகவும் அடிக்கக் கூடியவர். நிறைய ஷார்ட்கள் தன் வசம் வைத்திருக்கிறார். குஜராத் அணிக்கு நன்றாக செயல்பட்டு வருவதை கண்டு மகிழ்ச்சியடைகிறேன். இன்னும் சில சிறந்த ஹிட்டர்கள் குஜராத் அணிக்கு இருக்கின்றனர்” என்று குறிப்பிட்டார்.