ஐபிஎல் தொடரிலிருந்து விலகுங்கள் - விராட் கோலிக்கு ரவி சாஸ்திரி அட்வைஸ்!

Updated: Wed, Apr 27 2022 20:25 IST
Image Source: Google

நடப்பாண்டு ஐபிஎல் தொடரில் மிக மோசமாக விளையாடி வருகிறார் கோலி. 9 ஆட்டங்களில் 128 ரன்கள் மட்டுமே எடுத்துள்ளார். கடைசி 5 ஆட்டங்களில் 9, 0, 0, 12, 1 என மொத்தமாக 22 ரன்களே எடுத்துள்ளார். இதற்குத் தீர்வு தான் என்ன?

இந்நிலையில் விராட் கோலியின் மோசமான ஃபார்ம் குறித்து கருத்து தெரிவித்துள்ள இந்திய அணியி முன்னாள் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி, ஐபிஎல் தொடரிலிருந்து விலகி ஓய்வெடுத்துக்கொள்ள வேண்டும் என தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து ரவி சாஸ்திரி, ஒரு யூடியூப் சேனலுக்கு அளித்த பேட்டியில் கூறுகையில், “விராட் கோலிக்குத் தற்போதைய தேவை, ஓய்வு. இடைவெளி இல்லாமல் அவர் விளையாடி வருகிறார். மூன்று வகை கிரிக்கெட் போட்டிகளிலும் கேப்டனாகப் பணியாற்றியுள்ளார். எனவே தற்போது ஓய்வு எடுத்துக்கொள்வது நல்ல முடிவாக இருக்கும். 

சர்வதேச கிரிக்கெட்டில் 6, 7 வருடங்கள் விளையாட எண்ணினால் ஐபிஎல் போட்டியிலிருந்து விலக வேண்டும். விராட் கோலிக்கு மட்டுமல்லாமல் வேறு எந்த வீரருக்கும் இந்த அறிவுரையைத்தான் கூறுவேன். இந்தியாவுக்காக விளையாடவேண்டும் என விரும்பினால் எப்போது ஓய்வெடுக்க வேண்டும் என முடிவெடுக்க வேண்டும். 

ஐபிஎல் போட்டி நடைபெறும்போதுதான் இந்திய அணி சர்வதேச ஆட்டங்களில் விளையாடுவதில்லை. நான் பாதிப் போட்டியில் தான் விளையாடுவேன், எனவே எனக்குப் பாதித் தொகை மட்டும் கொடுங்கள் என்று ஐபில் அணியிடம் கூறுங்கள். விராட் கோலி இளைஞர் தான். இன்னும் 5-6 வருடங்கள் விளையாடுவார்” என்று தெரிவித்துள்ளார்.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை