45 வயதில் ஒரு கெய்ல்; கவுண்டி கிரிக்கெட்டை அலறவிட்ட ஸ்டீவன்ஸ்!
இங்கிலாந்தில் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் குறைந்து வருவதை அடுத்து, அங்கு உள்ளூர் கிரிக்கெட் போட்டிகள் நட்சத்தப்பட்டு வருகிறது.
இந்நிலையில், இங்கிலாந்தின் கவுண்டி சாம்பியன்ஷிப் தொடரில், கெண்ட் அணியும் கிளாமோர்கன் அணியும் மோதின. இதில், முதலில் பேட்டிங் செய்த கெண்ட் அணி, தனது முதல் இன்னிங்ஸில் 307 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.
இதில் 128 ரன்களுக்கு 8 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. இதனால் அடுத்த 5 நிடத்தில் ஆட்டம் முடியும் என எதிர்பார்க்கப்பட்டது. அதன்பின் 7ஆவது வீரராக களமிறங்கிய 45 வயதான ஆல்-ரவுண்டர் டேரன் ஸ்டீவன்ஸ் அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்த தொடங்கினார்.
ஸ்பின், ஃபாஸ்ட் என எதிரணி பவுலர்கள் கலந்து கட்டி பந்துவீச, அதனை சிறிதும் பொருட்படுத்தாத ஸ்டீவன்ஸ் சிக்சரும், பவுண்டரியுமாக விளாசி அசத்தினார். இதன் மூலம் 149 பந்துகளில் 15 பவுண்டரிகள், 15 சிக்சர்கள் என விளாசி 190 ரன்களையும் சேர்த்தார்.
இதில் 9ஆவது விக்கெட்டுக்கு 166 ரன்களைச் சேர்த்தது. இதில் நான் ஸ்டிரைக்கராக இருந்த கம்மின்ஸ் ஒரு ரன்னை மட்டுமே எடுத்திருந்தது.
இதையடுத்து டேரன் ஸ்டீவன்ஸ் இந்த அபாரமான ஆட்டத்தை கண்ட ரவிச்சந்திரன் அஸ்வின், ஷிகா பாண்டே உள்ளிட்ட கிரிக்கெட் வீரர்கள் புகழ்ந்து தள்ளுகின்றன.