வங்கதேச டெஸ்ட் தொடரில் சாதனைகளை குவிக்க காத்திருக்கும் ரவி அஸ்வின்!

Updated: Tue, Sep 17 2024 09:30 IST
Image Source: Google

வங்கதேச அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 2 டெஸ்ட் மற்றும் 3 டி20 போட்டிகளில் விளையாடவுள்ளது. இரு அணிகளுக்கும் இடையிலான டெஸ்ட் தொடர் முதலில் நடைபெறுகிறது. முதல் டெஸ்ட் போட்டி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் செப்டம்பர் 19 ஆம் தேதி தொடங்குகிறது. இப்போட்டிக்கான இரு அணி வீரர்களையும் அந்நாட்டு கிரிக்கெட் வாரியங்கள் அறிவித்துள்ளன. மேற்கொண்டு இரு அணி வீரர்கள் தற்சமயம் தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். 

இந்நிலையில் இந்த டெஸ்ட் தொடரில் விளையாடும் இந்திய அணியின் நட்சத்திர சுழற்பந்து வீச்சாளர் ரவிச்சந்திரன் அஸ்வின், உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பில் அதிக விக்கெட் வீழ்த்தியவர்கள் பட்டியலில் முதலிடத்தைப் பிடிப்பதில் இருந்து இந்திய மண்ணில் அதிக விக்கெட்டுகளை கைப்பற்றிய அனில் கும்ப்ளேவின் சாதனையை முறியடிப்பது வரை இந்த் டெஸ்ட் தொடரில் பல சாதனைகளை படைக்கும் வாய்ப்பினை பெற்றுள்ளார்.

அந்த வகையில், டெஸ்ட் கிரிக்கெட்டில் வங்கதேச அணிக்கு எதிராக முன்னாள் ஜாம்பவான் வீரர் ஜாகீர் கான் 31 விக்கெட்டுகள் எடுத்துள்ளதே இதுநாள் வரை சாதனையாக இருந்து வருகிறது. அவருக்கு அடுத்த இடத்தில் ரவிச்சந்திரன் அஸ்வின் 23* விக்கெட்டுகளுடன் 2ஆவது இடத்தில் உள்ளார். இந்நிலையில் இந்த தொடரில் அஸ்வின் மேற்கொண்டு 9 விக்கெட்டுகளை கைபற்றும் பட்சத்தில் ஜாகீர் கானை பின்னுக்கு தள்ளி முதலிடத்திப் பிடிப்பார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதுதவிர 2023 - 25 உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரில் இதுவரை அதிக விக்கெட்டுகள் எடுத்த வீரராக ஆஸ்திரேலியாவின் ஜோஸ் ஹேசல்வுட் 51 விக்கெட்டுகளை வீழ்த்தி முதலிடத்தில் உள்ளார். அவருக்கு அடுத்த இடத்தில் இந்தியாவின் ரவிச்சந்திரன் 42 விக்கெட்டுகளுடன் 2ஆவது இடத்தில் உள்ளார். எனவே இந்த தொடரில் அஸ்வின் இன்னும் 10 விக்கெட்டுகள் எடுத்தால் இந்த டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரில் அதிக விக்கெட்டுகள் எடுத்த வீரர் எனும் சாதனையை தன்வசப்படுத்துவார். 

மேற்கொண்டு ரவிச்சந்திரன் அஸ்வின் இந்தியாவில் இதுவரை 126 சர்வதேச போட்டிகளில் விளையாடி 455 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். இந்நிலையில் எதிர்வரும் வங்கதேச தொடரில் 22 விக்கெட்டுகளை வீழ்த்தும் பட்சத்தில், இந்திய மண்ணில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்தி பந்துவீச்சாளர் எனும் சாதனையைப் படைத்து அசத்துவார். இந்த பட்டியலில் இந்திய அணியின் முன்னாள் வீரர் அனில் கும்ப்ளே 476 விக்கெட்டுகளுடன் முதலிடத்தில் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. 

Also Read: Funding To Save Test Cricket

இதுதவிர்த்து இந்த தொடரில் அஸ்வின் 4 விக்கெட்டுகளை கைப்பற்றும் பட்சத்தில் சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய 8ஆவது வீரர் எனும் பெருமையைப் பெறுவார். தற்போது இந்த பட்டியலில் 8ஆம் இடத்தை வெஸ்ட் இண்டீஸ் ஜாம்பவான் கர்ட்னி வால்ஷ் உள்ளார். இந்திய அணிக்காக இதுவரை 100 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ள அஸ்வின் 516 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. 

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை