சிஎஸ்கே அணி விடுவிக்கும் வீரர்கள் விவரம் வெளியானது; ஆனால் அதில் ஜடேஜா இல்லை!

Updated: Fri, Nov 04 2022 12:45 IST
Image Source: Google

2023ஆம் ஆண்டு ஐபிஎல் சீசன் தொடருக்கான ஆரம்ப பணிகளை அனைத்து அணிகளும் தற்போது மேற்கொண்டு வருகிறது. இதனையொட்டி வரும் டிசம்பர் மாதம் ஐபிஎல் மினி ஏலத்தை நடத்த பிசிசிஐ திட்டமிட்டுள்ளது. இதற்காக நவம்பர் 15ஆம் தேதிக்குள் எந்த வீரர்களை விடுவிக்க போகிறோம் என்ற பட்டியலை ஐபிஎல் அணிகள் சமர்பிக்க பிசிசிஐ கெடு விதித்துள்ளது. இதில் டெல்லி அணி ஷர்துல் தாக்கூர், கேஎஸ் பரத் போன்ற வீரர்களை விடுவிக்க உள்ளதாக தகவல் வெளியானது.

இந்த நிலையில், அனைவரின் கவனமும் சிஎஸ்கே மீது திரும்பியுள்ளது. ஜடேஜாவுக்கும், சிஎஸ்கே அணி நிர்வாகத்திற்கும் சிக்கல் ஏற்பட்டுள்ளதாக கூறப்படும் நிலையில், அணியை விட்டு வெளியேற ஜடேஜா முடிவு எடுத்திருப்பதாக தெரிகிறது. இதனால் டெல்லி அணி ஜடேஜாவை தங்களுக்கு டிரான்ஸ்ஃபெர் செய்யும் படி கேட்டு கொண்டனர்.

ஆனால் ஜடேஜாவை அனுப்பும் எண்ணம் இல்லை என்று சிஎஸ்கே கூறியுள்ளது. தற்போது எந்த வீரர்களை விடுவிக்கலாம் என்ற பட்டியலை சிஎஸ்கே தயாரித்துள்ளதாக தெரிகிறது. அதில் கடந்த சீசனின் போது காயம் ஏற்பட்டு பாதியில் வெளியேறிய நியூசிலாந்து வீரர் ஆடம் மிலினை சிஎஸ்கே விடுவிக்க உள்ளது.

இதே போன்று கடந்த முறை அதிக ரன்களை விட்டு கொடுத்த இங்கிலாந்து வேகப்பந்துவீச்சாளர் கிறிஸ் ஜார்டனையும் விடுவிக்கும் முடிவை சிஎஸ்கே எடுத்துள்ளது. உத்தப்பா ஓய்வு பெற்ற நிலையில், அவரும் விடுவிக்கப்படுவார். இந்த பட்டியலில் ஜடேஜா இல்லை. ஜடேஜா போன்ற ஒரு ஆல்ரவுண்டர் அணிக்கு மிகவும் முக்கியம் என்பதால், அவரை விடுவிக்க கூடாது என்று தோனி கண்டிப்பாக கூறியுள்ளார்.

இதனால் ஜடேஜா வேறு எந்த அணிக்கும் செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. மீறி செல்ல முயன்றால், ஏற்கனவே கடந்த 2010 ஆம் ஆண்டு ஐபிஎல்லில் விளையாட தடை விதிக்கப்பட்டது போல், தற்போதும் தடை விதிக்கப்படலாம். தோனியின் இந்த செக்கை எதிர்பாராத ஜடேஜா, தற்போது செய்வது அறியாமல் உள்ளார்.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை