லைனை மிக இறுக்கமாக வைத்திருக்க வேண்டும் - ரவீந்திர ஜடேஜா!
நடப்பு ஒருநாள் கிரிக்கெட் உலகக்கோப்பை தொடரில் இன்று இந்திய அணி வங்கதேச அணிக்கு எதிராக புனே மைதானத்தில் விளையாடி வருகிறது. இந்த போட்டியில் முதலில் டாஸ் வென்ர வங்கதேச அணியின் புதிய கேப்டன் நஜ்முல் ஹொசைன் சாண்டோ தங்கள் அணி முதலில் பேட்டிங் செய்யும் என்று அறிவித்தார்.
இதையடுத்து களமிறங்கிய வங்கதேசஅணியின் தொடக்கம் ஆட்டக்காரர்கள் தன்ஸித் ஹசன் மற்றும் லிட்டன் தாஸ் இருவரும் மிக சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி முதல் விக்கெட்டுக்கு 93 ரன்கள் கொண்டு வந்தார்கள். அதன்பின் தன்ஸித் ஹசன் 51, லிட்டன் தாஸ் 66 ரன்கள் எடுத்து வெளியேறினார்கள்.
அதன்பின் வங்கதேச அணிக்கு முஸ்பிக்கூர் ரஹீம் 36, மஹ்மதுல்லா 48 மட்டுமே குறிப்பிட தகுந்த ரன்கள் எடுத்தார்கள். மற்ற யாரும் சரியான ரன் பங்களிப்பை வங்கதேச அணிக்கு தரவில்லை. இதனால் 50 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட் இழப்புக்கு வங்கதேச அணி 256 ரன்கள் மட்டுமே எடுத்தது. இந்திய அணி தரப்பில் ஜடேஜா, பும்ரா, சிராஜ் தலா 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றினர்,
இந்நிலையில் இன்னிங்ஸ் முடிவில் பேசிய ரவீந்திர ஜடேஜா, “இது நல்ல விக்கெட். இதில் எந்தத் திருப்பமும் வந்து வீச்சில் கிடைக்கவில்லை. எனவே இங்கு பந்துவீச்சை எளிமையாக வைத்திருப்பது அவசியம். அப்படி செய்தால் எங்களால் எளிமையாக சேஸ் செய்ய முடியும். அந்த கேட்ச் பிடித்த பிறகு நான் செய்த செலிப்ரேஷன் எங்கள் அணியின் பில்டிங் பயிற்சியாளரை பார்த்துதான்.
ஏனென்றால் எங்கள் அணியில் அன்றைய நாளில் யார் சிறப்பாக பீல்டிங் செய்கிறார்களோ அவர்களுக்கு பதக்கம் தரப்படும். எனவே நான் விளையாட்டாக எனக்கு தர வேண்டும் என்று சைகை செய்தேன். இந்த ஆடுகளத்தில் பந்தை ஸ்டெம்பை விட்டு வேறு எங்கும் வீசக்கூடாது. தொடர்ந்து லைனை மிக இறுக்கமாக வைத்திருக்க வேண்டும். மேலும் நீங்கள் எந்த மாதிரியான பீல்டிங் வைத்திருக்கிறிர்களோ அதற்கேற்றவாறு வீசவேண்டும்” என்று தெரிவித்தார்.