ஐபிஎல் 15ஆவது சீசனின் இன்றைய போட்டியில் மும்பை இந்தியன்ஸும் ஆர்சிபியும் விளையாடின. இதற்கு முன் ஆடிய 3 போட்டிகளிலும் தோல்வியை தழுவிய மும்பை இந்தியன்ஸ் அணி, இந்த போட்டியில் வெற்றி பெறும் முனைப்பில் களமிறங்கியது.

Advertisement

மும்பை டி.ஒய்.பாட்டீல் மைதானத்தில் நடந்த இந்த போட்டியில் டாஸ் வென்ற ஆர்சிபி கேப்டன் ஃபாஃப் டுப்ளெசிஸ் ஃபீல்டிங்கை தேர்வு செய்தார்.

Advertisement

அதன்படி முதலில் பேட்டிங் செய்த மும்பை இந்தியன்ஸ் அணியின் தொடக்க வீரர் இஷான் கிஷன் தடுமாற, மற்றொரு தொடக்க வீரரும் கேப்டனுமான ரோஹித் சர்மா அதிரடியாக தொடங்கினார். 15 பந்தில் 26 ரன்கள் அடித்து ரோஹித் ஆட்டமிழக்க, டிவால்ட் பிரெவிஸ் 8 ரன்னிலும், அவரைத்தொடர்ந்து இஷான் கிஷன் 26 ரன்னிலும் ஆட்டமிழந்தனர். 

திலக் வர்மா ரன்னே அடிக்காமல் ரன் அவுட்டானார். அவரைத்தொடர்ந்து பொல்லார்டும் டக் அவுட்டாக, 10.1 ஓவரில் 62 ரன்களுக்கே 5 விக்கெட்டுகளை இழந்தது மும்பை இந்தியன்ஸ் அணி. அதன்பின்னர் தனி ஒருவனாக களத்தில் நின்று போராடிய சூர்யகுமார் யாதவ் அரைசதம் அடித்தார். 17வது ஓவரில் மும்பை அணி 100 ரன்களை கடந்தது. 

சிராஜ் வீசிய 19ஆவது ஓவரில் சூர்யகுமார் யாதவ் 3 சிக்ஸர்களை விளாச, அந்த ஓவரில் மட்டும் 23 ரன்கள் கிடைத்தது. கடைசி ஓவரின் முதல் 3 பந்தில் ஒரு ரன் மட்டுமே வழங்கினார் ஹர்ஷல் படேல். 4 மற்றும் 5வது பந்துகளில் ரன் அடிக்காத சூர்யகுமார், கடைசி பந்தை சிக்ஸருக்கு விளாச, 20 ஓவரில் 151 ரன்கள் அடித்தது மும்பை அணி.

இதையடுத்து இலக்கை துரத்திய ஆர்சிபி அணிக்கு கேப்டன் ஃபாஃப் டூ பிளெசிஸ் - அனுஜ் ராவத் இணை அபாரமான தொடக்கத்தைக் கொடுத்தனர். இதில் 16 ரன்களில் டூ பிளெசிஸ் ஆட்டமிழந்து வெளியேறினார்.

Advertisement

அதன்பின் ஜோடி சேர்ந்த விராட் கோலி - அனுஜ் ராவத் இணை அபாரனமான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியை வெற்றிக்கு அழைத்துச் சென்றனர். இதில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அனுஜ் ராவத் ஐபிஎல் தொடரில் தனது முதல் அரைசதத்தைப் பதிவு செய்தார்.

இதையடுத்து 66 ரன்களில் ராவத் ஆட்டமிழக்க, மறுமுனையில் அரைசதம் அடிப்பார் என்ற எதிர்பார்த்த விராட் கோலி 48 ரன்களில் ஆட்டமிழந்து வெளியேறினார். இருப்பினும் அடுத்து களமிறங்கிய கிளென் மேக்ஸ்வெல் அடுத்தடுத்து இரண்டு பவுண்டரிகளை விளாசி அணிக்கு வெற்றியைத் தேடித்தந்தார்.

இதன்மூலம் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் மும்பை இந்தியன்ஸை வீழ்த்தி அபார வெற்றியைப் பெற்றது.

Advertisement

About the Author

Bharathi Kannan
Bharathi Kannan - He is very interested in cricket. Participated in Domestic level cricket matches. He has experience working in sports news in various media. He has the experience of providing news from different angles non-stop in all types of cricket series like IPL, World Cup. He is also very interested in sports news including cricket, tennis, football and kabaddi. பாரதி கண்ணன் - கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு ஊடகங்களிலும் விளையாட்டு செய்திகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட் என அனைத்து வடிவிலான கிரிக்கெட் தொடர்களின் போதும் இடைவிடாது பல்வேறு கோணங்களில் செய்திகளை அளித்த அனுபவம் உண்டு. கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், கால்பந்து, கபடி உள்ளிட்ட இதர விளையாட்டு செய்திகளிலும் அதீத ஆர்வமுள்ளவர். Read More
Latest Cricket News