ராயூடுவின் காயம் குறித்த அப்டேட் - சிஎஸ்கே சிஇஓ
கரோனா தொற்றால் ஒத்திவைக்கப்பட்டிருந்த ஐபிஎல் தொடரின் 14ஆவது சீசன், நேற்றுமுதல் மீண்டும் ஐக்கிய அரபு அமீரகத்தில் தொடங்கியது.
இதில், நேற்று நடைபெற்ற 30ஆவது லீக் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 20 ரன்களில் மும்பை இந்தியன்ஸ் அணியை வீழ்த்தி வெற்றிபெற்றது.
இப்போட்டியின் போது ஆடம் மில்னே வீசிய பந்தை எதிர்கொண்ட சிஎஸ்கேவின் அம்பத்தி ராயூடு காயமடைந்து போட்டியிலிருந்து பாதியிலேயே வெளியேறினார்.
இதையடுத்து அவருக்கு மேற்கொண்ட எக்ஸ்ரே முடிவில், அவருக்கு எந்தவொரு எழும்புமுறிவும் ஏற்படவில்லை என சிஎஸ்கே அணியின் தலைமை அதிகாரி காசி விஸ்வநாதன் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து பேசிய அவர், “அம்பத்தி ராயூடுவிற்கு மேற்கொள்ளப்பட்ட எக்ஸ்ரே முடிவில் அவருக்கு எந்தவொரு எழும்பு முறிவும் ஏற்படவில்லை என்பதை உறுதிசெய்துள்ளது. அதனால் அவர் ஆர்சிபி அணிக்கெதிரான போட்டியில் நிச்சயம் விளையாடுவார்” என்று தெரிவித்துள்ளார்.
Also Read: இந்திய அணியின் இங்கிலாந்து சுற்றுப்பயணம், 2021
வருகிற 24ஆம் தேதி சென்னை சூப்பர் கிங்ஸ் - ரயால் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியை எதிர்கொள்ளவுள்ளது.