15 பந்துகளில் அரைசதம் விளாசிய லிவிங்ஸ்டோன்; ஆர்சிபி ரசிகர்கள் கொண்டாட்டம்!
நடப்பு சீசன் அபுதாபி டி10 லீக் தொடரானது விறுவிறுப்பான கட்டத்தை எட்டியுள்ளது. இத்தொடரின் 18ஆவது லீக் போட்டியில் டெல்லி புல்ஸ் மற்றும் பங்களா டைகர்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. அதன்படி அபுதாபியில் உள்ள ஷேக் சயீத் கிரிக்கெட் மைதானத்தில் ந்டைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்ற பங்களா டைகர்ஸ் அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்து டெல்லி புல்ஸ் அணியை பேட்டிங் செய்ய அழைத்தது.
அதன்படி களமிறங்கிய டெல்லி புல்ஸ் அணியானது எதிரணி பந்துவீச்சுக்கு ஈடுகொடுக்க முடியாமல் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து நடையைக் கட்டினர். இருப்பினும் இறுதியில் களமிறங்கிய நிகில் சௌத்ரி அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தியதுடன் 16 பந்துகளில் 7 பவுண்டரி, 2 சிக்ஸர்கள் என 47 ரன்களைச் சேர்த்து அணிக்கு தேவையான ஃபினிஷிங்கை கொடுத்தார். இதன்மூலம் டெல்லி புல்ஸ் அணி 10 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்டுகளை இழந்து 126 ரன்களைச் சேர்த்தது. பங்களா டைகர்ஸ் அணி தரப்பில் டேவிட் பெய்ன், ஜோஷுவா லிட்டில் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை கைப்பற்றினர்.
இதனையடுத்து இலக்கை நோக்கி களமிறங்கிய பங்களா டைகர்ஸ் அணிக்கு ஹஸ்ரதுல்லா ஸஸாய் மற்றும் முகமது ஷஷாத் இணை தொடக்கம் கொடுத்தனர். இதில் ஷஷாத் 5 ரன்களில் விக்கெட்டை இழக்க, ஹஸ்ரதுல்லா ஸஸாயும் 24 ரன்களில் ஆட்டமிழந்தனர். பின்னர் இணைந்த தசுன் ஷனகா மற்றும் லியாம் லிவிங்ஸ்டோன் இணை அதிரடியாஅன ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் ஸ்கோரை மளமளவென உயர்த்தினர். இதில் 2 பவுண்டரி, 3 சிக்ஸர்கள் என 33 ரன்களில் ஷனகா ஆட்டமிழக்க, மறுபக்கம் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த லியாம் லிவிங்ஸ்டோன் 15 பந்துகளில் 3 பவுண்டரி, 5 சிக்ஸர்கள் என 50 ரன்களை விளாசி அணிக்கு வெற்றியைத் தேடித்தந்தார்.
Also Read: Funding To Save Test Cricket
இதன்மூலம் பங்களா டைகர்ஸ் அணி 9.4 ஓவர்களில் இலக்கை எட்டியதுடன் 7 விக்கெட் வித்தியாசத்தில் டெல்லி புல்ஸ் அணியை வீழ்த்தி வெற்றிபெற்றது. இப்போட்டியில் அதிரடியாக விளையாடி அரைசதம் கடந்த லியாம் லிவிங்ஸ்டோன் ஆட்டநாயகன் விருதை வென்றார். முன்னதாக நடந்து முடிந்த ஐபிஎல் வீரர்களுக்கான ஏலத்தில் லியாம் லிவிங்ஸ்டோனை 8.75 கோடி ரூபாய்க்கு ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி ஏலத்தில் எடுத்திருந்தது. இந்நிலையில் தான் லிவிங்ஸ்டோன் தனது அதிரடியான ஆட்டத்தின் மூலம் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளார். இந்நிலையில் லிவிங்ஸ்டோன் அதிரடியாக விளையாடிய காணொளி இணையத்தில் வைரலாகி வருகிறது.