ஐபிஎல் 2022: விராட் கோலியின் பேட்டிங் குறித்து பேசிய டூ பிளெசிஸ்!

Updated: Sat, May 14 2022 11:48 IST
Image Source: Google

நேற்றைய ஆட்டத்தில் பஞ்சாப் அணி 209 ரன்களை குவித்தது.இதனை துரத்திய பெங்களூரு அணி 155 ரன்கள் மட்டுமே எடுத்துள்ளது. ஆர்சிபி அணி 13 போட்டியில் விளையாடி 14 புள்ளிகள் பெற்று , மைனஸ் 0.32 ரன் ரேட் உடன் 4வது இடத்தில் உள்ளது.

இதனால் கடைசி போட்டியில் வென்றே ஆக வேண்டும் என்ற இக்கட்டான நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது. விராட் கோலி தொடர்ந்து பேட்டிங்கில் சொதப்புகிறார். இதனால் அவரை 2 போட்டியில் ஓய்வு எடுத்து கொள்ள டுபிளஸிஸ் அறிவுறுத்தி இருக்கிறார். ஆனால் விராட் கோலி அதனை ஏற்காமல் தொடர்ந்து மோசமாக விளையாடி வருகிறார். இதனால் டுபிளஸிஸ் விரக்தி அடைந்துள்ளார்.

இந்த நிலையில் தோல்வி குறித்து பேசிய டுபிளஸிஸ், “200 ரன்களுக்கு மேல் அடிக்க விட்டு இருக்க கூடாது. அப்படி ரன்கள் சென்றாலே பேட்டிங்கில் சிறப்பாக விளையாட வேண்டும். நாங்கள் கொத்து கொத்தாக விக்கெட்டுகளை இழந்து விடுகிறோம். அது தான் எங்களுக்கு இருக்கும் பிரச்சினையே.எங்களுக்கு நேற்று சிறந்த இரவாக அமையவில்லை.

எப்படி எல்லாம் ஒருவரால் அவுட்டாக முடியுமோ, அப்படி கோலி அவுட்டாகிறார், அப்படி தான் கிரிக்கெட் இருக்கும். பஞ்சாப்க்கு எதிராக கூட பெரிய ஷாட்களை ஆடினார். அவர் இன்னிங்ஸ் முழுவதும் தொடர்ந்து அதிரடியாக விளையாட வேண்டும் என எதிர்பார்க்கிறோம். ஆனால் அனைவரின் வாழ்க்கையிலும் இப்படி நடக்கும்.

ஒரு வலைப் பயிற்சியில் பங்கேற்று பேட்டிங் செய்தால் எல்லாம் மாறிவிடாது. மனதளவில் நாம் மாற்றத்தை மேற்கொண்டால் மட்டுமே ரன் அடிக்க முடியும் என்று டுபிளஸிஸ் கூறினார். விராட் கோலி எப்போதுமே பயிற்சி, பயிற்சி என கதியாக இருக்கும் நிலையில், பயிற்சி போதாது, மனதில் தான் பிரச்சினை” என்று தெரிவித்துள்ளார்.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை