ஐபிஎல் 2024: ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு vs குஜராத் டைட்டன்ஸ் - உத்தேச லெவன்!

Updated: Sat, May 04 2024 14:43 IST
Image Source: Google

 

இந்தியாவில் தொடங்கி நடைபெற்று வரும் ஐபிஎல் தொடரின் 17ஆவது சீசன் நாளுக்கு நாள் ரசிகர்களின் எதிர்பார்ப்புகளை அதிகரித்து வரும் நிலையில், எந்த நான்கு அணிகள் பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறும் என்ற பரபரப்பையும் கூட்டியுள்ளது. இத்தொடரில் இன்று நடைபெறும் 52ஆவது லீக் போட்டியில் ஃபாப் டூ பிளெசிஸ் தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியை எதிர்த்து, ஷுப்மன் கில் தலைமையிலான குஜராத் டைட்டன்ஸ் அணி பலப்பரீட்சை நடத்தவுள்ளது. இரு அணிகளிலும் அதிரடி வீரர்கள் இருப்பதால் இப்போட்டியின் மீதான எதிர்பார்ப்புகளும் அதிகரித்துள்ளன. இந்நிலையில் இவ்விரு அணிகளின் கணிக்கப்பட்ட பிளேயிங் லெவன் குறித்து இப்பதிவில் பார்ப்போம்.

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு

ஃபாஃப் டூ பிளெசிஸ் தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி இதுவரை விளையாடியுள்ள 10 போட்டிகளில் 3 வெற்றி, 7 தோல்வி என 6 புள்ளிகளுடன் புள்ளிப்பட்டியலின் கடைசி இடத்தில் உள்ளது. இதனால் அந்த அணி பிளே ஆஃப்  சுற்று வாய்ப்பில் நூலிழையில் தொங்கி கொண்டிருக்கும் பெங்களூரு அணி தனது எஞ்சிய 4 போட்டிகளில் வெற்றி பெறுவதுடன், மற்ற அணிகளின் முடிவும் சாதகமாக அமைந்தால் மட்டுமே அந்த அணியால் அடுத்த சுற்றுக்குள் நுழைய முடியும் என்ற நிலையில் உள்ளது.

அந்த அணியின் பேட்டிங்கைப் பொறுத்தவரையில், விராட் கோலி, கேப்டன் பாப் டு பிளிஸ்சிஸ், தினேஷ் கார்த்திக் நல்ல நிலையில் உள்ளனர். கடந்த சில ஆட்டங்களில் ரஜத் படிதார், வில் ஜாக்ஸ், கேமரூன் கிரீன் ஆகியோரும் கணிசமான பங்களிப்பை  வழங்கி வருவது அணிக்கு உத்வேகமளிக்கிறது. பந்து வீச்சில் யாஷ் தயாள், முகமது சிராஜ், கரன் சர்மா  ஆகியோர் வலுசேர்க்கிறார்கள். இதனால் அந்த அணி இன்றைய போட்டியிலும் வெற்றிபெறும் முனைப்புடன் விளையாடவுள்ளது. 

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு உத்தேச லெவன்: விராட் கோலி, ஃபாஃப் டு பிளெசிஸ் (கே), வில் ஜாக்ஸ், கிளென் மேக்ஸ்வெல், ராஜத் பட்டிதார், கேமரூன் கிரீன், தினேஷ் கார்த்திக், ஸ்வப்னில் சிங், கர்ண் சர்மா, முகமது சிராஜ், யாஷ் தயாள்

குஜராத் டைட்டன்ஸ்

ஷுப்மன் கில் தலைமையில் களமிறங்கியுள்ள முன்னாள் சாம்பியனான குஜராத் டைட்டன்ஸ் அணி இந்த ஐபிஎல் சீசனில் பெரிதளவில் சோபிக்க முடியாமல் தடுமாறி வருகிறது. அந்த அணி இதுவரை விளையாடிய்ள்ள 10 போட்டிகளில் 4 வெற்றி, 6 தோல்விகள் என 8 புள்ளிகளுடன் புள்ளிப்பட்டியலில் 8ஆம் இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது. அதன் காரணமாக எஞ்சிய 4 போட்டிகளில் வெற்றிபெற்றால் மட்டுமே அந்த அணியால் பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேற முடியும் என்ற நிலையில் இப்போட்டியை எதிர்கொள்கிறது. 

அந்த அணியின் பேட்டிங்கை பொறுத்தவரையில் தமிழக வீரர்கள் சாய் சுதர்ஷன், ஷாரூக் கான் ஆகியோர் சிறப்பாக செயல்பட்டுள்ளனர். ஆனால் அதேசமயம் ஷுப்மன் கில், டேவிட் மில்லர், விருத்திமான் சஹா போன்ற வீரர்கள் தொடர்ச்சியாக ரன்களை குவிக்க தடுமாறி வருவது அணிக்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது. பந்து வீச்சில் மொஹித் ஷர்மா, ரஷித் கான், சாய் கிஷோர், நூர் அகமது நம்பிக்கை அளிக்கிறார்கள். இருப்பினும் அவர்கள் ரன்களை கட்டுப்படுத்த வேண்டிய அவசியமாகும்.

குஜராத் டைட்டன்ஸ் உத்தேச லெவன்: விருத்திமான் சாஹா, ஷுப்மான் கில் (கே), சாய் சுதர்ஷன், அஸ்மத்துல்லா ஓமர்சாய், டேவிட் மில்லர், ராகுல் திவேத்தியா, ரஷித் கான், ரவிஸ்ரீனிவாசன் சாய் கிஷோர், நூர் அகமது, மோஹித் சர்மா, சந்தீப் வாரியர்.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை