ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு vs கொல்கத்தா நைட் ரைடர்ஸ்- அணிகள் ஓர் அலசல்!
ரசிகர்களின் பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் நடைபெற்ற ஐபிஎல் தொடரின் 18ஆவது சீசன் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. மொத்தம் 10 அணிகள் பங்கேற்றிருந்த நிலையில், 7 அணிகள் பிளே ஆஃப் சுற்றுக்கான வாய்ப்பில் நீடித்து வருகின்றன.
இதனிடையே இந்தியா - பாகிஸ்தான் இடையேயான போர் பதற்றம் காரணமாக இடை நிறுத்தப்பட்ட 18ஆவது சீசன் ஐபிஎல் தொடரின் எஞ்சிய போட்டிகள் இன்று முதல் மீண்டும் தொடரவுள்ளது. பெங்களூருவில் உள்ள எம் சின்னசாமி மைதானத்தில் நடைபெறும் லீக் போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தவுள்ளன. முன்னதாக நடப்பு ஐபிஎல் தொடரில் இவ்விரு அணிகளும் மோதிய முதல் போட்டியில் ஆர்சிபி அணி வெற்றிபெற்று அசத்திய நிலையில், அதற்கான பதிலடியை கேகேஆர் அணி இப்போட்டியில் கொடுக்குமா என்ற எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளன.
ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு
ரஜத் பட்டிதார் தலைமையிலான ஆர்சிபி அணியானது இந்த ஐபிஎல் தொடரில் 8 வெற்றிகள், 3 தோல்விகள் என 14 புள்ளிகளுடன் புள்ளிப்பட்டியலின் 2ஆம் இடத்தில் உள்ளது. அணியின் பேட்டிங்கில் விராட் கோலி, பில் சால்ட், ராஜத் படிதர், டிம் டேவிட் மற்றும் ரொமாரியோ ஷெஃபெர்ட் சிறப்பான ஃபார்மில் உள்ளது அணிக்கு பெரும் பலமாக பார்க்கப்படுகிறது. அவர்களுடன் பந்துவீச்சில் புவனேஷ்வர், சுயாஷ் சர்மா, யாஷ் தயாள் மற்றும் குர்னால் பாண்டியா உள்ளிட்டோரும் சிறப்பாக செயல்பட்டு வருகின்றனர்.
எஞ்சியுள்ள வீரர்களும் சிறப்பாக செயல்படும் பட்சத்தில் அந்த அணியின் வெற்றியைத் தடுத்து நிறுத்துவது கடினமாகும். மேற்கொண்டு அந்த அணி கடைசியாக சென்னை சூப்பர் கிங்ஸ் தங்களுடைய சொந்த மைதானத்தில் வீழ்த்திய உத்வேகத்துடன் இப்போட்டியை எதிர்கொள்ளவுள்ளது. இதனால் இன்றைய ஆட்டத்திலும் அந்த அணி சொந்த மைதானத்தில் வெற்றிபெற்று ரசிகர்களுக்கு விருந்துபடைக்குமா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்,
ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு உத்தேச லெவன்: பில் சால்ட், விராட் கோலி, மயங்க் அகர்வால், ரஜத் படிதார், ஜிதேஷ் சர்மா, டிம் டேவிட், குர்னால் பாண்டியா, ரொமாரியோ ஷெப்பர்ட், புவனேஷ்வர் குமார், லுங்கி என்கிடி, யாஷ் தயாள்.
கொல்கத்தா நைட் ரைடர்ஸ்
அஜிங்கியா ரஹானே தலைமையிலான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி இதுவரை விளையாடிவுள்ள 12 போட்டிகளில் 5 வெற்றி, 6 தோல்வி மற்றும் ஒரு முடிவில்லை என 11 புள்ளிகளுடன் பட்டியலில் 6ஆம் இட்த்தில் உள்ளது. மேற்கொண்டு அந்த அணி கடந்த போட்டியில் அடைந்த அதிர்ச்சி தோல்விக்கு பிறக்கு இப்போட்டியை எதிர்கொள்கிறது. இதனால் இனிவரும் போட்டிகளில் அந்த அணி வெற்றிபெற்றால் மட்டுமே பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேற முடியும் என்ற நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது.
அதிலும் குறிப்பாக அணியின் பேட்டிங் ஆர்டரில் ரஹானே, ரகுவன்ஷியைத், ஆண்ட்ரே ரஸல் தவிர்த்து மற்ற வீரர்கள் ரன்களைச் சேர்க்க முடியாமல் தடுமாறி வருவது அணிக்கு பெரும் பின்னடைவாக பார்க்கப்படுகிறது. அதேசமயம் அணியின் பந்துவீச்சு துறையில் சுனில் நரைன், வருண் சக்ரவர்த்தி, வைபவ் ஆரோரா, ஹர்ஷித் ராணா ஆகியோர் தொடர்ந்து அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருவது அணிக்கு நம்பிக்கை அளிக்கும் ஒன்றாக உள்ளது.
கொல்கத்தா நைட் ரைடர்ஸ் உத்தேச லெவன்: ரஹ்மனுல்லா குர்பாஸ், சுனில் நரைன், அஜிங்க்யா ரஹானே (கேப்டன்), வெங்கடேஷ் ஐயர், ரின்கு சிங், ரமன்தீப் சிங், ஆண்ட்ரே ரசல், ரோவ்மன் பாவெல், ஹர்ஷித் ராணா, வைபவ் அரோரா, வருண் சக்ரவர்த்தி
நேருக்கு நேர்
- மொத்தம் – 35
- கொல்கத்தா நைட் ரைடர்ஸ் – 20
- ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு - 15
Also Read: LIVE Cricket Score
ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்
- விக்கெட் கீப்பர்- பில் சால்ட், ரஹ்மனுல்லா குர்பாஸ்
- பேட்ஸ்மேன்கள் - விராட் கோலி (கேப்டன்), அஜிங்க்யா ரஹானே, ஆங்க்ரிஷ் ரகுவன்ஷி
- ஆல்-ரவுண்டர்கள் - சுனில் நரைன் (துணை கேப்டன்), ஆண்ட்ரே ரஸ்ஸல், க்ருணால் பாண்ட்யா
- பந்துவீச்சாளர்கள் - லுங்கி இங்கிடி, வருண் சக்ரவர்த்தி, ஹர்ஷித் ராணா.