ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு vs பஞ்சாப் கிங்ஸ் - அணிகள் ஓர் அலசல்!
ரசிகர்களின் பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் நடைபெற்று வரும் 18ஆவது சீசன் ஐபிஎல் தொடரில் இன்று நடைபெறும் 34ஆவது லீக் போட்டியில் ரஜத் படிதார் தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு மற்றும் ஸ்ரேயாஸ் ஐயர் தலைமையிலான பஞ்சாப் கிங்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தவுள்ளன.
இவ்விரு அணிகளுக்கும் இடையேயான இப்போட்டியானது பெங்களூருவில் உள்ள எம் சின்னசாமி கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளது. இரு அணிகளும் வெற்றிக்கு பிறகு இப்போட்டியை எதிர்கொள்ளவுள்ளன. இதனால் இந்த ஆட்டத்தில் எந்த அணி வெற்றிபெற்று புள்ளிப்பட்டியலில் முன்னேறும் என்ற எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளன. இந்நிலையில் இரு அணிகளின் பலம், அணிகளின் உத்தேச லெவன், நேருக்கு நேர் தரவுகள் மற்றும் ஃபேண்டஸி லெவன் குறித்து இந்த பதிவில் பார்ப்போம்.
ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு
ரஜத் பட்டிதார் தலைமையிலான ஆர்சிபி அணி அடுத்தடுத்து வெற்றிகளைப் பதிவுசெய்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியதுடன் 4 வெற்றிகள், 2 தோல்விகள் என 8 புள்ளிகளுடன் புள்ளிப்பட்டியலின் மூன்றாம் இடத்தில் உள்ளது. அணியின் பேட்டிங்கில் விராட் கோலி, பில் சால்ட், ராஜத் படிதர், லிவிங்ஸ்டோன் மற்றும் டிம் டேவிட் ஆகியோர் சிறப்பான ஃபார்மில் உள்ளது அணிக்கு பெரும் பலமாக பார்க்கப்படுகிறது.
மறுபக்கம் பந்துவீச்சைப் பொறுத்த மட்டில் புவனேஷ்வர் குமார், ஜோஷ் ஹேசில்வுட் ஆகியோருடன் குர்னால் பாண்டியா, யாஷ் தயாளும் சிறப்பாக செயல்பட்டு வருகின்றனர். அவர்களுடன் சுயாஷ் சர்மாவும் ஃபார்முக்கு திரும்பியுள்ளது அணிக்கு பெரும் பலமாக பார்க்கப்படுகிறது. இருப்பினும் அந்த அணி பெங்களூருவில் நடைபெற்ற போட்டிகளில் வெற்றிபெறாமல் உள்ளதால் இந்த ஆட்டத்தில் அதனை மாற்றுமா என்ற எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளன.
ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு உத்தேச லெவன் : பில் சால்ட், விராட் கோலி, தேவ்தத் படிக்கல், ரஜத் படிதார் (கேப்டன்), லியாம் லிவிங்ஸ்டோன், ஜிதேஷ் சர்மா (விக்கெட் கீப்பர்), க்ருனால் பாண்டியா, டிம் டேவிட், புவனேஷ்வர் குமார், ஜோஷ் ஹேசில்வுட், யாஷ் தயாள்.
பஞ்சாப் கிங்ஸ்
ஸ்ரேயஸ் ஐயர் தலைமையிலான பஞ்சாப் கிங்ஸ் அணி நடப்பு ஐபிஎல் தொடரில் இதுவரை விளையாடிய 6 போட்டிகளில் 4 வெற்றி, 2 தோல்விகளுடன் 6 புள்ளிகள் பெற்று பட்டியலில் 4ஆவது இடத்தில் உள்ளது. அதிலும் குறிப்பாக கந்த போட்டியில் அந்த அணி 111 ரன்கள் என்ற இலக்கை வெற்றிகரமாக டிஃபெண்ட் செய்தும் அசத்தியதுடன் ஐபிஎல் தொடர் வரலாற்றிலும் புதிய சாதனையை படைத்த உத்வேகத்துடன் இப்போட்டியை எதிர்கொள்ளவுள்ளது.
அணியின் பேட்டிங்கைப் பொறுத்தவரையில் பஞ்சாப்பிடம் எந்த பிரச்சனையும் இல்லாத நிலையில், பந்துவீச்சு துறையிம் தற்போது ஃபார்முக்கு திரும்பியுள்ளது. அதிலும் குறிப்பாக அணியின் நட்சத்திர பந்துவீச்சாளர் யுஸ்வேந்திர சஹால் ஃபார்மிற்கு திரும்பியுள்ளது அணிக்கு பெரும் பலமாக பார்க்கப்படுகிறது. இருப்பினும் அந்த அண்ணியின் இதற்கிடையில் பஞ்சாப் கிங்ஸின் நட்சத்திர வேகப்பந்து வீச்சாளர் லோக்கி ஃபெர்குசன் காயம் காரணமாக தொடரில் இருந்து விலகியதாக கூறப்படுகிறது. இது அந்த அணிக்கு பெரும் பிரச்சையாக உருவாகியுள்ளது. இதனால் இன்றைய ஆட்டத்தில் அந்த அணி எவ்வாறு சமாளிக்கும் என்ற எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளன.
பஞ்சாப் கிங்ஸ் உத்தேச லெவன்: பிரியன்ஸ் ஆர்யா, பிரப்சிம்ரன் சிங் (விக்கெட் கீப்பர்), ஸ்ரேயாஸ் ஐயர் (கேப்டன்), நேஹல் வதேரா, ஷஷாங்க் சிங், கிளென் மேக்ஸ்வெல், மார்கஸ் ஸ்டோனிஸ், மார்கோ ஜான்சன், அர்ஷ்தீப் சிங், யுஸ்வேந்திர சாஹல், வைஷாக் விஜய்குமார்.
நேருக்கு நேர்
- மோதிய போட்டிகள் – 33
- ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு – 16
- பஞ்சாப் கிங்ஸ் - 17
Also Read: Funding To Save Test Cricket
ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்
- விக்கெட் கீப்பர் - பில் சால்ட், பிரப்சிம்ரன் சிங்
- பேட்ஸ்மேன்கள் - விராட் கோலி (கேப்டன்), ஸ்ரேயாஸ் அய்யர் (துணை கேப்டன்), ரஜத் படிதார், நேஹல் வதேரா, பிரயன்ஷ் ஆர்யா
- ஆல்-ரவுண்டர்கள் - குர்னால் பாண்டியா, மார்கோ ஜான்சன்
- பந்து வீச்சாளர்கள் - ஜோஷ் ஹேசில்வுட், யுஸ்வேந்திர சாஹல்.