ஐபிஎல் 2023: தொடரின் முதல் பாதியிலிருந்து விலகும் படிதார்?

Updated: Sun, Mar 26 2023 15:57 IST
RCB's Rajat Patidar Likely To Miss First Half Of IPL 2023 With Heel Injury: Report (Image Source: Google)

ஐபிஎல் தொடரின் 16ஆவது சீசன் வருகிற மார்ச் 31ஆம் தேதி துவங்கி மே மாதம் 28ம் தேதி வரை நடைபெறுகிறது. இந்த வருடம் பழைய முறைப்படி உள்ளூர் மைதானத்திலும் வெளியூர் மைதானத்திலும் தலா ஒரு போட்டிகள் நடைபெறுவதால் சுவாரசியத்திற்கு சற்றும் குறைவே இருக்காது.

முதல் போட்டி வருகிற 31ஆம் தேதி சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் ஆகிய இரு அணிகளுக்கும் இடையே அகமதாபாத் மைதானத்தில் நடைபெறுகிறது. இதற்காக எதிர்பார்ப்பு உச்சத்தை தொட்டிருக்கிறது என்றே கூறலாம். ஏனெனில் சாம்பியன் பட்டம் வென்ற அணியுடன் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி மோதுகிறது.

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிக்கு முதல் போட்டி வருகிற மார்ச் 5ஆம் தேதி பெங்களூருவில் மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிராக தொடங்குகிறது. முதல் போட்டிக்கு நிறைய நாட்கள் இருந்தாலும் அணியில் முன்னணி வீரர்கள் சிலர் காயம் ஏற்பட்டு விளையாட முடியாத நிலைக்கு தள்ளப்பட்டு வருகின்றனர். முன்னதாக இங்கிலாந்து அணியைச் சேர்ந்த ஆல்ரவுண்டர் வில் ஜாக்ஸ் சர்வதேச போட்டியின்போது காயம்காரணமாக முழு ஐபிஎல் தொடரிலிருந்தும் விலகி உள்ளார். அவருக்கு மாற்று வீரரும் கொண்டுவரப்பட்டது.

பிறகு ஆஸ்திரேலியா அணியின் வேகப்பந்துவீச்சாளர் ஹேசல்வுட் காயம் காரணமாக இந்தியாவிற்கு எதிரான ஒருநாள் மற்றும் டெஸ்ட் தொடர்களில் விளையாடவில்லை. ஐபிஎல் தொடரில் சில போட்டிகளிலும் அவர் இடம்பெற மாட்டார் என்று கூறப்பட்டிருக்கிறது. சர்வதேச போட்டிகள் இருப்பதால் வநிந்து ஹசரங்கா சில ஐபிஎல் போட்டிகளில் இருக்க மாட்டார் என்று அறிவிப்பு வந்திருக்கிறது. 

இந்நிலையில், கடந்த ஐபிஎல் சீசனில் அபாரமாக செயல்பட்ட ரஜத் படிதார் பயிற்சியின்போது ஏற்பட்ட காயத்தினால் முதல் பாதி ஐபிஎல் தொடரில் இருக்க மாட்டார் என்ற தகவல் வெளியாகியுள்ளது.  தெரிய வந்திருக்கிறது. ஏப்ரல் 14ஆம் தேதி அவருக்கு இரண்டாவது ஸ்கேன் செய்யப்படும். அதில் சரியாக இருந்தால் மட்டுமே மீதி பாதி ஐபிஎல்லில் விளையாடுவது உறுதியாகும் என்றும் தகவல் வந்திருப்பதால் ஆர்சிபி அணிக்கு பின்னடைவை தந்திருக்கிறது.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை