ஐபிஎல் 2023: ஆர்சிபி அணியின் ஆல் ரவுண்டர் வில் ஜேக்ஸ் விலகல்!

Updated: Thu, Mar 16 2023 12:13 IST
Image Source: Google

ஐபிஎல் தொடரின் 16ஆவது சீசன் வரும் 31ஆம் தேதி தொடங்க உள்ளது. மொத்தம் 10 அணிகள் பங்கேற்கும் ஐபிஎல் தொடருக்காக பல்வேறு அணி வீரர்களும் தயாராகி வருகின்றனர். இதனிடையே, நடப்பு ஐபிஎல் தொடரில் இருந்து பெங்களூரு ஆல்-ரவுண்டர் விலகியுள்ளார். 

இங்கிலாந்து அணியின் ஆல்-ரவுண்டரான வில் ஜாக்சை நடப்பு ஐபிஎல் தொடரில் பெங்களூரு அணி 3 கோடியே 20 லட்ச ரூபாய்க்கு ஏலம் எடுத்தது. வில் ஜாக்ஸ் நடப்பு ஐபிஎல் தொடரில் விளையாடுவார் என எதிர்பார்க்கப்பட்டது.

இந்நிலையில், நடப்பு ஐபிஎல் தொடரில் இருந்து வில் ஜாக்ஸ் விலகியுள்ளார். வங்கதேசத்திற்கு எதிரான ஒருநாள் போட்டியின் போது வில் ஜாக்ஸுக்கு சதைப்பகுதியில் காயம் ஏற்பட்டது. இதன் காரணமாக அவர் ஓய்வு எடுக்க மருத்துவக்குழுவினர் பரிந்துரைத்தனர்.

இதனால், நடப்பு ஐபிஎல் தொடரில் பெங்களூரு அணியில் இருந்து வில் ஜாக்சன் விலகியுள்ளார். அவருக்கு பதிலாக நியூசிலாந்து ஆல்ரவுண்டர் மைக்கேல் பிரேஸ்வெல்லை அணியில் சேர்க்க பெங்களூரு அணி திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள் ::

அதிகம் பார்க்கப்பட்டவை