ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் 16ஆவது சீசன் கடந்த மார்ச் 31ஆம் தேதி முதல் கோலாகலமாக நடைபெற்று வருகிறது. இந்த தொடர் ஆரம்பத்தில் இருந்தே பல அணிகளை சேர்ந்த நட்சத்திர வீரர்கள் காயம் காரணமாக வெளியேறுவது தொடர்கதை ஆகியுள்ள நிலையில், பெங்களூர் அணிக்கு இந்த விசயம் பெரிய சிக்கலையும் ஏற்படுத்தி உள்ளது.

Advertisement

ஏனெனில் ஏற்கனவே இந்த தொடர் ஆரம்பிப்பதற்கு முன்னதாக மினி ஏலத்தில் பெங்களூரு அணியால் வாங்கப்பட்ட இங்கிலாந்து அணியின் அதிரடி ஆட்டக்காரரான வில் ஜேக்ஸ் காயம் காரணமாக இடம்பெறாமல் முடியாமல் போனது. அதேபோன்று இந்த ஐபிஎல் தொடருக்கான பயிற்சியில் ஈடுபட்டு வந்த அந்த அணியின் நட்சத்திர மிடில் ஆர்டர் பேட்ஸ்மேனான ரஜத் படித்தார் பயிற்சியின்போது ஏற்பட்ட காயம் காரணமாக இந்த தொடரில் இருந்தே விலகியிருந்தார்.

Advertisement

இந்நிலையில் தற்போது பெங்களூரு அணியில் இருந்து மூன்றாவது வீரராக இங்கிலாந்து அணியை சேர்ந்த வேகப்பந்து வீச்சாளர் ரீஸ் டாப்லி அதிகாரவபூர்வமாக ஐபிஎல் தொடரிலிருந்து வெளியேறியுள்ளார் என்ற தகவல் வெளியாகி உள்ளது. இங்கிலாந்து அணியின் நட்சத்திர வேகப்பந்து வீச்சாளரான அவர் பெங்களூர் அணிக்காக முதல் போட்டியில் மிகச் சிறப்பான பந்துவீச்சை வெளிப்படுத்தி இருந்தார். 

அதனை தொடர்ந்து இனிவரும் போட்டிகளிலும் அவர் கட்டாயம் பெங்களூரு அணிக்காக இடம்பெற்று விளையாடுவார் என்று எதிர்பார்க்கப்பட்ட வேளையில் கடைசியாக நடைபெற்ற மும்பை அணிக்கு எதிரான போட்டியின் போது ஃபீல்டிங் செய்கையில் கேட்ச் பிடிக்க சென்று வலது தோள்பட்டையில் காயமடைந்தார். இதன் காரணமாக அவருக்கு அறுவை சிகிச்சை மேற்கொள்ள உள்ளதால் அவர் நாடு திரும்பி உள்ளார் என்று பெங்களூரு நிர்வாகம் அதிகாரப்பூர்வமாக இன்று அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

About the Author

Bharathi Kannan
Bharathi Kannan - He is very interested in cricket. Participated in Domestic level cricket matches. He has experience working in sports news in various media. He has the experience of providing news from different angles non-stop in all types of cricket series like IPL, World Cup. He is also very interested in sports news including cricket, tennis, football and kabaddi. பாரதி கண்ணன் - கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு ஊடகங்களிலும் விளையாட்டு செய்திகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட் என அனைத்து வடிவிலான கிரிக்கெட் தொடர்களின் போதும் இடைவிடாது பல்வேறு கோணங்களில் செய்திகளை அளித்த அனுபவம் உண்டு. கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், கால்பந்து, கபடி உள்ளிட்ட இதர விளையாட்டு செய்திகளிலும் அதீத ஆர்வமுள்ளவர். Read More
Latest Cricket News